செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Sirakadikkum Asai: உண்மையை சொல்லி மீனாவை கூட்டிட்டு தனிகுடித்தனம் போகும் முத்து.. அண்ணாமலை விஜயாவுக்கு கிடைத்த தண்டனை

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவின் எதார்த்தமான நடிப்பும் கதாநாயகனாக ஆடும் ஆட்டத்திற்கு தான் இந்த நாடகத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட முத்துவுக்கே இது சத்திய சோதனை என்று சொல்லும் அளவிற்கு பெருத்த அடி விழுந்துவிட்டது.

அதாவது சத்தியாவின் நண்பரான லோக்கல் ரவுடி மீனா மற்றும் முத்துவை பழி வாங்குவதற்காக சதி செய்து சூழ்ச்சியில் சிக்க வைத்து விட்டார். எந்தத் தவறுமே செய்யாமல் முத்துவும் அதில் மாட்டிக் கொண்டார். சமூக வலைதளங்களில் முத்து ஒரு குடிகாரராக சித்தரிக்கப்பட்டு இவருடைய காரில் சவாரி செய்தால் அது பாதுகாப்பு கிடையாது என்பதற்கு ஏற்ப அனைத்து இடங்களிலேயும் பரப்பி விட்டு விட்டார்.

இதை தெரிந்து கொண்ட டிராபிக் போலீஸ் முத்துவை வழிமறைத்து காரை எடுத்துக் கொண்டார்கள். இந்த கோபத்துடன் வீட்டிற்கு போன முத்துவுக்கு மனோஜ் மிகப் பெரிய ஆப்பு வைத்து விட்டார். அதாவது சமூக வலைதளங்களில் முத்துவை பற்றி தவறான வீடியோ வெளிவந்ததை குடும்பத்தில் அனைவருக்கும் போட்டுக்காட்டி விட்டார்.

முத்து மீனாவுக்கு பிறந்து விடிவு காலம்

அத்துடன் ரோகிணி இதுதான் சான்ஸ் என்று முத்துவை தாறுமாறாக பேசி அனைவரது மனதிலும் தவறான கண்ணோட்டத்தை திணித்து விட்டார். இந்த சூழ்நிலையில் வீட்டிற்கு வந்த முத்துவை அண்ணாமலை அடிக்க கை ஓங்கி கோபமாக பேசி விட்டார். அதே மாதிரி விஜயாவும் அதனால் தான் இவர்களை வீட்டை விட்டு வெளியே அனுப்பி போக சொன்னேன்.

தயவுசெய்து இப்பவாவது வீட்டை விட்டு வெளியே போய்விடு என்று விஜயா சொல்கிறார். ஆனால் முத்து என்னை நம்புங்கள் நான் எந்த தவறுமே பண்ணவில்லை என்று ஒவ்வொருவரிடமும் கெஞ்சுகிறார். ஆனால் யாருமே காது கொடுத்து கேட்கவே இல்லை. போதாதற்கு மீனாவும் முத்துவை நம்பவில்லை.

பிறகு குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் முத்துவை ஒதுக்கிய நிலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்விட்டார் முத்து. அங்க போய் ஒவ்வொருவரிடமும் நான் எந்த தவறும் பண்ணவில்லை. என்னுடைய காரை கொடுத்து விடுங்கள் என்று கெஞ்சுகிறார். ஆனால் அவர்களோ உன்னுடைய டிரைவிங் லைசென்ஸ் நாங்கள் கேன்சல் பண்ண முடிவு பண்ணி இருக்கிறோம்.

அது தெரியாமல் நீ காரை கேட்டு எங்கள் முன்னாடி வந்து நிற்கிறாய் என்று சொல்லி அலட்சியப்படுத்தி விட்டார்கள். அத்துடன் ஒவ்வொரு போலீசும் அவர்களுக்கு தேவையான டீ, காபி, சாப்பாடு அனைத்தையும் முத்துவை வாங்கிட்டு வரச் சொல்கிறார்கள். முத்துவுக்கும் வேறு வழி இல்லாமல் போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கும் ஒருவராக மாறி அனைத்து எடுபிடி வேலைகளையும் பார்த்து வருகிறார்.

குடும்பத்தில் சவால் விட்ட முத்து

இதையெல்லாம் பார்க்கும் பொழுது அனைவரது கோபமும் ரோகிணி மீதுதான் திரும்புகிறது. அதாவது தொடர்ந்து தில்லாலங்கடி வேலையை பார்த்து பொய் பித்தலாட்டம் பண்ணி குடும்பத்தை ஏமாற்றி வரும் ரோகிணி ஒரு விஷயத்தில் கூட மாட்டவில்லை. ஆனால் முத்துவிற்கு தொடர்ந்து ஏகப்பட்ட பிரச்சினைகள் வந்து கொண்டே இருப்பது போல் காட்சிகள் அமைந்து வருவதால் அனைவரும் வெறுத்துப் போய்விட்டார்கள்.

இதையெல்லாம் தாண்டி முத்து எப்படி இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர போகிறார் என்பதுதான் தொடர்ந்து வரப்போகும் சுவாரஸ்யமான கதையாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் தன் மீது எந்தவித தவறும் இல்லை என்று நிரூபித்த பிறகு நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று முத்து சவால் விட்டு இருக்கிறார்.

அதன்படி முத்து எந்த குற்றமும் பண்ணவில்லை என்று நிரூபித்த பின்பு மீனாவை கூட்டிட்டு தனிகுடித்தனம் போகப் போகிறார். அந்த வகையில் மீனா, முத்து மற்றும் இவருடைய நண்பர் அனைவரும் தனி வீட்டில் இருப்பது போல் ஒரு போட்டோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. அதன் மூலம் நிச்சயம் இவர்கள் தனியாக போய்விடுவார்கள் என்பது தெரிகிறது.

ஆனால் முத்து மீது எந்தவித தவறும் இல்லை என்று தெரிந்ததும் அண்ணாமலை குற்ற உணர்ச்சியில் கூனி குருகி போய் நிற்க போகிறார். அத்துடன் ரோகிணி ஆட்டமும் இனி அந்த குடும்பத்தை ஆட்டிப்படைக்க போகிறது. இதுதான் அண்ணாமலைக்கும் விஜயாவுக்கும் கிடைக்கப் போகிற மிகப் பெரிய தண்டனையாக அமையும்.

Trending News