உயிர் தமிழுக்கு அரசியல் பின்னணியில் ராஜன்.. கார்ப்பரேட்டை வம்புக்கு இழுத்து கொந்தளித்த அமீர்!

Leave the corporate and piss off the individual Amir is furious: தமிழ் திரையுலகில் மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அமீருக்கு, புது புது பிரச்சனைகள் புதுப்புது விதத்தில் படையெடுத்து வருகிறது எனலாம்.

பருத்திவீரன் பிரச்சனையில் ஞானவேல் ராஜாவிற்கும் அமிருக்கும் இடையேயான பிரச்சனை  ஒருவாறு தீர்ந்த நிலையில், 

தற்போது குற்ற பின்னணி கொண்ட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்கின் தொடர்பால், பலவிதங்களிலும் பிரச்சனையை சந்தித்துக் கொண்டு வருகிறார்.

“இறைவன் மிகப் பெரியவன்” என்று அமீர் இயக்கி வந்த படத்தின் ப்ரொடியூசர்  தான் ஜாபர்சாதிக். இவரின் தவறான நடவடிக்கையினால் அமலாக்க துறை ஜாபர் சாதிக்கை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இவருடன் பழகிய காரணத்தினால் அமீருக்கும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி   விசாரணை செய்தது, அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

சமீபத்தில் உயிர் தமிழுக்கு என்ற அரசியல் பின்னணியை கொண்ட திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார்.

உயிர் தமிழுக்கு இசை வெளியீட்டு விழாவில் ஆவேசமாக பேசிய அமீர்

மே 10ம் தேதி ரிலீசாக உள்ள இதன் இசை வெளியிட்டு விழாவில், பத்திரிக்கையாளர்கள் அமீரை சந்தித்து சரமாரியான கேள்விகளை கேட்டனர்.

தன் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பொறுமையாகவும் காமெடியாகவும் பதில் கூறி வந்த அமீர் அவர்கள், ஒருகட்டத்தில் ஆவேசமாக பேச ஆரம்பித்தார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை பற்றி தெரியாது என்று கூறமாட்டேன். தொடர்பு இல்லை என்று கூறவும் மாட்டேன். ஆனால் அவர் மீது உள்ள குற்றத்திற்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்பது மட்டும் உறுதி.

பணம் சம்பாதிப்பது எனது நோக்கம் அல்ல. சிறைக்கு செல்லவும் நான் தயார். ஆனால் நான் வெறுக்கும் தவறான குற்றத்திற்காக என் மீது  தவறான குற்றம்  சாட்டினால், நான் சிறை செல்ல மாட்டேன் என்று ஆணித்தரமாக கூறினார்.

அதுமட்டுமின்றி செய்தியாளர் ஒருவர், உங்கள் நண்பனாக இருந்த சாதிக்கின் தொழில் பற்றி உங்களுக்கு தெரியாதா? அவருக்கு எவ்வாறு பணம் வருகிறது என்பது பற்றி உங்களுக்கு தெரியாதா? என சரமாரியாக கேள்வி கேட்க,

இதற்கு பதிலளித்த அமீர் அவர்கள் லண்டனில் லைக்கா மீது புகார் இருக்கிறதே! இதே கேள்வியை ஏன் லைக்காவிடம் கேட்கவில்லை? கார்ப்பரேட் என்றால் விட்டுவிடுவீர்கள்! சாதாரண மனிதன் என்னை சூழ்ந்து கொள்கிறீர்கள்! என்று ஆவேசமாக பேசினார்.