செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Ethirneechal: குணசேகரனின் அடுத்த டார்கெட் நந்தினி.. கதிரின் வீக்னஸ் பாயிண்ட்டை குறிவைத்த முரட்டு அண்ணன்

Ethirneechal serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், இதுவரை குணசேகரனின் வக்கிரமத்தையும் கொடூர புத்தியையும் காட்டி ஒவ்வொருவரையும் ஆட்டிப்படைத்தார். ஆனால் கடைசியாக தர்ஷினி விஷயத்தில் தோற்றுப் போனதால் அடிபட்ட பாம்பாக அடங்கி விட்டார்.

ஆனால் அது வெறித்தனமாக ஒவ்வொருவரையும் கொத்துவதற்காக தான் பதுங்கி இருக்கிறார். அந்த வகையில் முதல் பலியாடாக ஞானம் சிக்கிவிட்டார். அதாவது ஞானம் சுயபுத்தி இல்லாதவர் என்று அனைவருக்கும் தெரியும். அதனால் அவரை ஈசியாக கவுத்து விடலாம் என்று பிளான் பண்ணி விட்டார்.

அதற்கேற்ற மாதிரி அவரும் நான் வாழ்க்கையில் சாதிக்கப் போகிறேன். பிசினஸ் பண்ண போகிறேன். கொடிக்கட்டி பறக்க போகிறேன் என்று வாய் சவடால் விட்டுக் கொண்டிருந்தார். இந்த சான்சை சரியாக குணசேகரன் பயன்படுத்திக் கொண்டார்.

ஒவ்வொருவரையும் டார்கெட் பண்ணும் குணசேகரன்

அந்த வகையில் கரிகாலன் மூலமாக ஞானத்துக்கு மிகப்பெரிய ஆப்பை வைத்து விட்டார். அது தெரியாமல் ஞானம் வானத்துக்கும் பூமிக்கும் குதித்து இனி என் பெயர் சொல்லும்படி தான் இந்த குடும்பம் அமையப் போகிறது. அந்த அளவிற்கு நான் முன்னேறி காட்டுவேன் என்று குதிக்கிறார்.

இவரை தொடர்ந்து குணசேகரனின் அடுத்த டார்கெட் நந்தினி. அந்த வகையில் கதிருக்கு வீக்னஸ் பாயிண்ட் எது என்று நன்றாகவே தெரியும். அதன்மூலம் குணசேகரன் ஸ்கெட்ச் போட்டு கதிரை சிக்க வைக்கப் போகிறார். முன் செஞ்ச பாவம் காலம் காலத்துக்கு தொடரும் என்று சொல்வதற்கு ஏற்ப கதிர் இப்பொழுது திருந்தினாலும், பழைய விஷயங்களை கிண்டி கிளறப் போகிறார் குணசேகரன்.

அதனால் குணசேகரன் செய்த தவறுகளை கண்டுபிடித்து அதை வைத்து கதிர் நந்தினி வாழ்க்கையில் கும்மி அடிக்கப் போகிறார். இதற்கிடையில் ஞானம் பிசினஸில் தோல்வி அடைந்து தோற்றுப் போய் நிற்கும் பொழுது ரேணுகா எனக்கு இவர் வேண்டாமே என்று தலை திரித்து ஓட போகிறார்.

இதே மாதிரி கதிருக்கும் நந்தினிக்கும் இடையில் பிரச்சனை வரும் பொழுது நந்தினி கதிரை விட்டு பிரிய வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஒவ்வொருவரையாக பிரித்து நான்கு பெண்களின் அடுத்த கட்டத்தின் முன்னேற்றத்தை தடுக்கும் வகையில் குணசேகரன் குறி வைத்து விட்டார்.

ஏற்கனவே ஈஸ்வரி புருஷன் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டார். இவரை தொடர்ந்து ரேணுகாவும் அந்த நிலைமைக்கு வரப்போகிறார். அதன்பின் கதிரை கவுத்து நந்தினியையும் அந்த முடிவை எடுக்க வைக்க போகிறார். கடைசியில் மிஞ்சிய இருப்பது ஜனனி தான். இவருக்கும் மிகப்பெரிய தூண்டிலே போடுவதற்கு தயாராக குணசேகரன் இருக்கிறார்.

ஆக மொத்தத்தில் கடைசியில் இந்த நான்கு பெண்களும் கணவர்களை விட்டு பிரிந்து பின்பு தான் சொந்தக்காலில் ஜெயிப்பதற்கான முயற்சிகள் நடைபெற போகிறது.

Trending News