Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ஞானத்திற்கு தன் பெயர் சொல்லும் அளவிற்கு வளர்ந்து வரணும் என்ற ஆசையால் கண்மூடித்தனமாக கரிகாலனை நம்புகிறார். ஆனால் கரிகாலன், குணசேகரன் ஆட்டி வைக்கும் பொம்மையாக இருந்து ஞானத்தை கவுக்க போகிறார்.
அதாவது குணசேகரன் பொறுத்தவரை வீட்டிற்கு வந்த நான்கு மருமகள்களும் கணவன் கொடுக்கும் சப்போர்ட் வைத்துதான் ஓவராக துள்ளுகிறார்கள் என்று தப்பு கணக்கு போட்டு அவர்களிடமிருந்து பிரிக்க பிளான் பண்ணிவிட்டார். அந்த வகையில் ஞானத்திற்கு மாமியார் கொடுத்த படத்தை நஷ்டப்படுத்தி விட்டால் ரேணுகாவிற்கும் ஞானத்திற்கும் சண்டைகள் வந்துவிடும்.
அதன் மூலம் ஒரு பூகம்பம் குடும்பத்திற்குள் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று குணசேகரன் நினைக்கிறார். அதே மாதிரி கரிகாலனை வைத்து ஞானத்தின் பணத்தை அனைத்தையும் காலி பண்ண வைத்து விட்டார். இது தெரியாத நான்கு மருமகள்களும் ஞானம் ஏற்பாடு பண்ணின கடை திறப்பு விழா பங்ஷனுக்கு போய்விட்டார்கள்.
கமுக்கமாக இருந்து குணசேகரன் விரிக்கும் வலை
ஆனால் அங்க போய் பார்த்த பிறகு தான் தெரியுது கரிகாலன் தான் எல்லாத்துக்கும் காரணம் என்று. எதற்கெடுத்தாலும் கரிகாலன் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை என்று அடிக்கடி அவமானப்படுத்தி அடித்து வெளியே அனுப்பினார்கள். ஆனால் அப்படிப்பட்ட கரிகாலனிடம் ஞானம் போய் தஞ்சம் அடைந்து விட்டார் என்று ரேணுகா ஆக்ரோஷமாக மாறப் போகிறார்.
பிறகு எப்படியாவது ஞானத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிக்கலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று நான்கு மருமகளும் வழக்கம்போல் போராட்டத்தை ஆரம்பிக்கப் போகிறார்கள். இந்த பிரச்சினையை சரி செய்த பிறகு கதிர் மூலமாக நந்தினிக்கு டார்ச்சர் கொடுக்க போகிறார் குணசேகரன். பிறகு இவர்களுக்கு இருக்கும் சிக்கல்களை சமாளிக்கும் விதமாக மறுபடியும் நான்கு மருமகளும் ஒன்று சேர போகிறார்கள்.
இப்படி இவர்களின் வெற்றியை நோக்கி பயணிக்க விடாமல் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டும் வகையில் குணசேகரன் தம்பிகளை வைத்து ஒவ்வொருவரையும் குழிதோண்டி புதைக்க போகிறார். அந்த வகையில் கடைசியில் கணவர்கள் துணையே வேண்டாம் என்று தனி மரமாக நின்னு ஜெயிக்கப் போகிறார்கள். ஆனால் அது நடப்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் ஆகும் போல அந்த அளவிற்கு இழுத்தடித்துக் கொண்டுதான் கதை நகர்ந்து வருகிறது.