செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Mahanadhi: சன் டிவி சீரியலுக்கு ஒத்த ஆளாக இருந்து டஃப் கொடுக்கும் காவேரி.. விஜய்யை கைக்குள் போட்டு ஆடும் ஆடு புலி ஆட்டம்

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், காவிரியின் துள்ளலான நடிப்பு அனைவரையும் கவர்ந்து வருகிறது. பொதுவாக சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் கதாபாத்திரத்தில் மற்றவர்கள் என்ன பண்ணினாலும் அழுது கொண்டு பொறுமையாக காரியத்தை சாதித்து வருவார்கள். அப்படி பார்க்கும் பொழுது ரொம்பவே கடுப்பாக இருக்கும்.

ஆனால் அதற்கு எதிர்மாறாக காவேரியின் நடிப்பு அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விட்டது. அதாவது எந்த விஷயத்தில் யாரிடம் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை பொறுத்து காவேரி கேரக்டர் தைரியமாக துணிச்சலுடன் போராடும் வகையில் காட்டப்பட்டு வருகிறது.

விஜய்யை கல்யாணம் பண்ணிட்டு போன குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று சகித்துக் கொண்டு காவேரி இல்லாமல் தப்புனா அதுக்கு தண்டனை அனுபவித்து தான் ஆகணும் என்று அதிரடியாக களத்தில் இறங்கி விட்டார். அந்த வகையில் பசுபதி மற்றும் ராகினிக்கு தண்டனை கொடுக்கும் விதமாக நிச்சயதார்த்த பங்க்ஷனில் தரமான சம்பவத்தை செய்து விட்டார்.

அதிரடியாக களத்தில் இறங்கிய காவேரி

அதாவது நிச்சயதார்த்தம் நடக்கும் சமயத்தில் போலீஸிடம் கம்ப்ளைன்ட் கொடுத்து பசுபதியை அரெஸ்ட் பண்ண பிளான் பண்ணி விட்டார். அந்த வகையில் நிச்சயதார்த்தம் நடக்கும் பொழுது போலீஸ் கரெக்டா வந்து பசுபதி, காவேரியை கடத்தி வைத்து சித்திரவதை பண்ண விஷயத்திற்காக அரெஸ்ட் செய்து கூட்டிப் போய்விட்டார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ராகினி அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் பண்ணி நிச்சயதார்த்தம் நடக்காமல் போய்விட்டது. இந்த ஒரு விஷயத்திற்கு காவிரிக்கு யாரும் சப்போர்ட் பண்ணாட்டாலும் தாத்தா காவேரிக்கு நடந்த அநியாயத்துக்கு பசுபதிக்கு கிடைக்க வேண்டிய தண்டனை சரிதான் என்று கூறிவிட்டார்.

ஆனால் இதில் விஜய் மற்றும் எதுவும் சொல்லாமல் கொஞ்சம் அமைதியாக இருக்கிறார். அந்த வகையில் காவேரியிடம் இந்த ஒரு விஷயத்திற்காக விஜய் சண்டை போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் அதற்கு துணிச்சலுடன் போராட சக்தியும் புத்தியும் காவிரியிடம் இருப்பதால் விஜய்யை ஈசியாக சமாளித்து விடுவார்.

இதனைத் தொடர்ந்து விஜய் மற்றும் தாத்தா இருக்கும் உறுதுணையால் காவேரி, ராகினி மற்றும் பசுபதிக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கப் போகிறார். அதனால் ராகினிக்கு வேறு வழி இல்லை அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு விஜய் வீட்டிற்கு வந்தால் தான் காவேரியை பழிவாங்க முடியும் என்பதால் திருட்டுத்தனமாக கல்யாணத்தை பண்ணிக்கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கப் போகிறார்.

ஆனாலும் எந்த பிரச்சனை வந்தாலும் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்று யுத்தி காவிரிக்கு நன்றாகவே தெரியும். இப்படி துணிச்சலுடன் இருக்கும் காவிரியின் கேரக்டர் பார்ப்பவர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் சன் டிவி சீரியலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் காவேரியின் கதாபாத்திரம் அமைந்து வருகிறது.

ஏனென்றால் சன் டிவி சீரியல் பொருத்தவரை ஹீரோயின்களாக நடிக்கும் கதாபாத்திரம் எப்பொழுதுமே அழுது கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டு மற்றவர்களுக்காக தியாகம் பண்ணி ஓவர் நல்லவர்களாக நடித்து கடுப்பேற்றுவார்கள். அப்படி இருக்கும் பொழுது காவிரியின் கதாபாத்திரம் சற்று வித்தியாசமாக இருப்பதால் சன் டிவியின் மொத்த சீரியலையும் காலி பண்ணும் வகையில் மகாநதி சீரியலில் காவேரியின் கதாபாத்திரம் பெரிசாக பேசப்பட்டு வருகிறது.

Trending News