Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், ஜெனி மற்றும் செழியன் குழந்தை பெயர் சூட்டு விழா பாக்யா வீட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஜெனியின் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் வந்தார்கள். அதே மாதிரி பழனிச்சாமி அம்மா, அக்காவை கூட்டிட்டு பாக்யா வீட்டிற்கு வருகிறார்.
அப்படி வரும்பொழுது பாக்யா வீட்டில் ஒரு பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது. அதாவது ஜெனியின் அப்பா எங்கள் முறைப்படி பெயர் வைப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அதே மாதிரி கோபியின் அம்மா நான் தான் பெயர் வைப்பேன். அதுவும் எங்கள் முறைப்படி தான் எங்களுடைய வாரிசுக்கு எல்லா விஷயத்தையும் செய்வேன் என்று கூறுகிறார்.
இப்படி இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பழனிச்சாமி வீட்டுக்குள் நுழைந்து ஜெனியின் அப்பாவை சமாதானப்படுத்தி கடைசியில் பாட்டி ஆசைப்பட்டபடி யாழினி என்ற பெயர் வைத்து ஃபங்ஷனை சிறப்பாக முடித்து வைத்து விட்டார். ஆனால் இதை எல்லாம் பார்த்த கோபி மட்டும் திருட்டு முழி முழித்துக் கொண்டிருக்கிறார்.
குடும்பத்தில் கும்மி அடிக்கப் போகும் ராதிகா
ஏனென்றால் ஜெனியின் அப்பா கோபமாகவும் யாரிடமும் சிரிச்சு பேசாமல் கடுகடுவென்று முகத்தை கடுப்பாகவே வைத்திருந்தார். ஆனால் அப்படிப்பட்ட ஜெனியின் அப்பாவை சாந்தப்படுத்தி சிரிக்க வைத்து அனைவரிடமும் பேச வைத்தது பழனிச்சாமி தான். அதனால் கோபி, இந்த பழனிச்சாமி இவரையும் மாற்றிவிட்டாரா என்று வழக்கம் போல் புலம்ப ஆரம்பித்து விட்டார்.
இதற்கு இடையில் ராதிகா கொஞ்சம் கால் நழுவி விழப் போகும்போது கோபி பிடித்துக் கொண்டு பேபி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று அக்கறையாக அனைவரது முன்னாடியும் பேசினார். இதனைப் பார்த்து அங்கு இருப்பவர்கள் முகம் சுளித்து இது என்ன ஒரு கண்றாவி என்று தலையில் அடித்துக் கொண்டார்கள்.
பிறகு ஃபங்ஷனுக்கு வந்தவர்கள் அனைவரும் வீட்டிற்கு திரும்பிய நிலையில் ஈஸ்வரி, கோபியை கூப்பிட்டு ஏன் எல்லாரும் முன்னாடியும் மானத்தை வாங்கினாய். கொஞ்சம் ராதிகாவிடம் அடக்கி வாசி என்று கண்டிக்கிறார். இதனை கேட்ட கோபி அம்மாவிடம் உண்மையை சொல்ல வேண்டும் என்று ஈஸ்வரியை மட்டும் தனியாக கூட்டிட்டு வெளியே போகிறார்.
அப்பொழுது இருவரும் சேர்ந்து காரில் போகும் பொழுது ஈஸ்வரி, கோபியிடம் உனக்கும் ராதிகாவுக்கும் ஏதாவது பிரச்சனையா என்று கேட்கிறார். அதற்கு கோபி எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. நம்ம வீட்டிற்கு ஒரு புது குழந்தை வரப் போகிறது என்று கோபி சொல்கிறார். உடனே இதைக்கேட்டு ஈஸ்வரி, அமிர்தாவுக்கும் எழிலுக்கும் குழந்தை பிறக்கப் போகிறதா என்று சந்தோசப்பட்டு கேட்கிறார்.
அதற்கு கோபி அவர்களுக்கு இல்லை அம்மா எனக்கு தான் குழந்தை பிறக்கப் போகிறது என்று உண்மையை போட்டு உடைக்கிறார். இதை கேட்டு கடுப்பான ஈஸ்வரி நேராக வீட்டிற்கு போய் ராதிகாவிடம் இந்த குழந்தை உனக்கு வேண்டாம் என்று சொல்கிறார். அதற்கு ராதிகா இதில் தலையிட உரிமை உங்களுக்கு இல்லை. நானும் கோபியும் சேர்ந்து இந்த குழந்தையை பெற்றெடுக்க போகிறோம் என்று முடிவு எடுத்து இருக்கிறோம் என ராதிகா கூறிவிட்டார்.
இதனால் கோபத்தில் ஈஸ்வரி என்ன செய்வது என்று தெரியாமல் ரூமுக்குள் போய்விட்டார். இப்பொழுது இந்த உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வரப்போகிறது. ராதிகா மற்றும் கோபி இதை எப்படி சமாளித்து என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.