Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில் ராகினி அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு விஜய் வீட்டுக்கு வந்தால் அந்த குடும்பமே அல்லோலப்படும் என்று காவேரி நிச்சயதார்த்தத்தை தடுக்க நினைத்தார். அது மட்டுமில்லாமல் பசுபதி செய்த அட்டூழியத்துக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பதற்காக நிச்சயதார்த்தத்தில் ஒரு சம்பவத்தை ஏற்படுத்தினார்.
அதாவது காவிரியை கடத்தி நவீனை பிளாக்மெயில் பண்ணின விஷயத்திற்கு போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து பசுபதியை அரெஸ்ட் பண்ணிட்டு போயிட்டார்கள். இதனால் நிச்சயதார்த்தம் பாதியிலேயே நின்னு போய்விட்டது. அத்துடன் ராகினி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியதை பார்த்து அஜய் வீட்டிற்கு வந்து காவிரி மீது கோபத்தை காட்டி விட்டார்.
அத்துடன் அஜய், அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி அனைவருமே காவிரியை திட்டி விட்டார்கள். போதாதற்கு விஜய்யும் காவேரியிடம் நீ பண்ணினது தவறுதான். உன்னுடைய வன்மத்தை தீர்க்க இந்த அளவுக்கு நீ போவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. பசுபதி மோசமானவன் தான் அது எனக்கு நன்றாக தெரியும். ஆனால் இப்பொழுது அவரை விட உன்னுடன் இருக்கிறது தான் எனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்கிறார்.
காவேரியை பழிவாங்க வாங்க திருட்டுத்தனம் பண்ணும் ராகினி
இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து காவிரியை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டார்கள். எப்போதுமே காவிரியை புரிந்து கொண்டு முழு ஆதரவையும் கொடுப்பது தாத்தா தான். ஆனால் அவரும் காவிரி செய்தது தவறு தான் என்று சொல்லிவிட்டார். இதனை அடுத்து ராகினி உச்சகட்ட கோபத்தில் காவிரியை பழி வாங்குவதற்கு வெறிகொண்டு அலையப் போகிறார்.
ஆனால் அதற்கு அஜய்யை கல்யாணம் பண்ணினால் தான் காவிரியை கவுக்க முடியும். இதனால் பசுபதியை ஜெயிலில் போய் காவேரி பார்க்கப் போகிறார். உடனே பசுபதியும் என்னை பற்றி நீ கவலைப்படாதே எப்படியாவது அஜய்யை கல்யாணம் பண்ணிட்டு அந்த வீட்டிற்கு போ என்று சொல்கிறார்.
அதன்படி அஜய்யை தனியாக கூப்பிட்டு நம் யாருக்கும் தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லப் போகிறார். உடனே அஜய்யும் இதற்கு சம்மதம் தெரிவித்த நிலையில் இருவரும் கல்யாணம் பண்ணிட்டு நேரடியாக விஜய் வீட்டுக்கு வரப் போகிறார்கள். வந்த பிறகுதான் காவேரிக்கும் ராகினிக்கும் ஒரு யுத்தமே நடக்கப்போகிறது.
ஆனால் காவிரி, ராகினியால் இந்த குடும்பத்திற்கு எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று ஒவ்வொரு விஷயத்திற்காகவும் இனி போராட போகிறார். இவருக்கு பக்கபலமாக விஜய் இருப்பாரா அல்லது காவிரியை புரிந்து கொள்ளாமலேயே போய் விடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.