2024 ஐபிஎல் போட்டிகளில் தோனி கேப்டன் பதவியை ருத்ராஜ் இடம் கொடுத்துவிட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக மட்டுமே விளையாடி வருகிறார். அவ்வப்போது கடைசி கட்டத்தில் இறங்கி பௌண்டரிகளையும், சிக்ஸர்களையும் விளாசி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.
போட்டிகளில் சில நேரங்களில் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடத்தில் களம் இறங்குகிறார் இது ரசிகர்களுக்கு பெரிய எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. அப்படி தோனி செய்வதற்கு சி எஸ் கே அணிக்கு கூட இப்போது தான் விடை தெரிந்துள்ளது. கடந்த போட்டியில் தோனி ஒன்பதாவது வீரராக களம் இறங்கியது மோசமான பல விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் தோனிக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போதே மருத்துவர்கள் அவரை இரண்டு ஆண்டுகள் ஓய்வு எடுக்கும்படி கூறினார்கள். அவரது முழங்காலில் தசைநார் கிழிந்து விட்டது. அதை வைத்துக்கொண்டு அவர் போட்டியில் விளையாடுவது ஆபத்து வாய்ந்தது.
அதனால் தான் தோனி பௌண்டரி, சிக்ஸர்களை மட்டும் குறி வைக்கிறார், கடைசியாக இறங்குகிறார். ஒன்று மற்றும் இரண்டு ரன்கள் ஓட மறுக்கிறார். அவர் ஓடினார் என்றால் தசைகளுக்கு பெரிய பாதிப்பு உண்டாகும். இப்படிப்பட்ட பிரச்சனைகளை வைத்துக்கொண்டு தான் விளையாடி வருகிறார் தோனி.
மேலும் 2024 போட்டிகளில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் பாதியில் அணியில் இருந்து விலக நேரிடும். அதனால்தான் கேப்டன் பொறுப்பை ருத்ராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்துவிட்டு தனி ஒரு வீரராக அணியில் விளையாடி வருகிறார். இந்த தகவல் தற்போது தான் சென்னை அணிக்கே தெரியவந்துள்ளது.