செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Sirakadikkum Asai: ரோகினி மூஞ்சியில் கரியை பூச மீனாவிற்கு கிடைத்த ஆதாரம்.. தரமாக சம்பவம் செய்ய போகும் முத்து

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து சொல்வது உண்மைதான். அவர் குடிக்கவில்லை என்று மீனாக்கு தற்போது புரிந்து விட்டது. அதாவது எல்லா வீடியோவையும் பார்த்து அனைவரும் முத்துவை தவறாக நினைத்து விட்டார்கள். இதில் மீனாவும் கொஞ்சம் முத்துவை நம்பாமல் போய்விட்டார்.

அதன்படி முத்துவை குடிப்பழக்கத்தில் இருந்து மொத்தமாக மாற்றுவதற்கு ஒரு மருந்தை கொடுத்தால் சரியாகும் என்று அதன்படி செயல்பட்டார். ஆனால் அந்த மருந்து ஜூசை தெரியாத்தனமாக விஜயா குடித்துவிட்டு வயிறு வலியில் அவஸ்தை படுகிறார். பிறகு அனைவரும் இருக்கும் பொழுது மீனா அந்த ஜூஸில் நான் முத்துவிற்காக மருந்து கலந்து வைத்திருந்தேன் என்று சொல்கிறார்.

அப்பொழுது மனோஜ், மீனாவை திட்டி ரொம்பவே அசிங்கப்படுத்தி விட்டார். அடுத்ததாக முத்து மாடியில் தனியாக இருக்கும் பொழுது மீனா போய் பேசுகிறார். அந்த நேரத்தில் மீனாவின் மடியில் முத்து படுத்து நான் சத்தியமாக குடிக்கவில்லை. அதுவும் நான் தொழில் பண்ணும் நேரத்தில் இதை மாதிரி பண்ணவே மாட்டேன் என்னை நம்பு என்று சொல்கிறார்.

ரோகினிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

உடனே மீனா நான் நம்புகிறேன் என்று சொல்லிய நிலையில் முத்து நீ எனக்கு ஆசையாக வாங்கிக் கொடுத்த காரை போலீஸ் எடுத்துட்டு போனது எனக்கு ரொம்பவே கவலையாக இருக்கிறது என்று அழுது புலம்புகிறார். உடனே முத்து அந்த காரை எப்படியாவது வாங்க வேண்டும் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார்.

இதற்கு அடுத்தபடியாக நடந்து உண்மை என்னவென்று தெரிந்து கொள்வதற்காக மீனா முயற்சி எடுக்கிறார். அந்த வகையில் முத்துவின் நண்பர் மூலம் ஒயின் ஷாப் கடைக்கு போயிட்டு சிசிடி புட்டேஜ் வீடியோவை பார்க்கிறார். அதில் தெளிவாக சிட்டி தான் அந்த மாதிரி வீடியோவை சித்தரித்திருக்கிறார்.

முத்து குடிக்கவே இல்லை என்பதை பார்த்து விடுகிறார். பிறகு அந்த வீடியோவை வாங்கிட்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறார். அதே மாதிரி குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் போட்டு காட்டி தன் கணவர் எந்தவித தவறும் பண்ணவில்லை என்று நிரூபித்துக் காட்டுகிறார்.

இதனை குடும்பத்தில் இருப்பவர்கள் பார்த்த பொழுது மூஞ்சி அப்படி சுருங்கி போய்விட்டது. முக்கியமாக ரோகிணி மூஞ்சியில் கரி பூசும் அளவிற்கு மீனா அந்த வீடியோவை போட்டுவிட்டு ரோகிணியின் கொட்டத்தை அடக்கப் போகிறார். இதன் பிறகு தான் முத்துவின் ஆட்டம் ஆரம்பம் என்று சொல்வதற்கு ஏற்ப இனி அடுத்து வரப் போகும் கதை நகரப் போகிறது.

அந்த வகையில் தன் மகனை அனாவசியமாக சந்தேகப்பட்டு விட்டோமே என்று அண்ணாமலை வருத்தப்பட போகிறார். அத்துடன் இனி என்னை நம்பாதே இந்த குடும்பத்தில் நான் இருக்க விரும்பவில்லை என்று மீனாவை கூட்டிட்டு தனியாக போகப் போகிறார். அப்படி மீனாவும் முத்துவும் தனியாக போகும் பொழுது தான் விஜயாவுக்கு மீனா முத்துவின் அருமை புரியப்போகிறது.

இதனை தொடர்ந்து கூடிய விரைவில் ரோகினி பற்றிய விஷயம் ஜீவா மூலம் முத்துவிற்கு தெரிய வரப்போகிறது. இந்த ஒரு விஷயத்தால் ரோகினியின் உண்மையான முகத்திரை அனைவரது முன்னாலையும் கிழியப்போகிறது.

Trending News