இப்போது டிஆர்பிஎல் சக்க போடு போட்டு வருவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர் தான். அதிலும் இதில் முத்து மற்றும் மீனா இருவர் இடையே ஆன கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இதில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த்தின் வாழ்க்கையைப் பற்றி பலருக்கும் தெரியாது. மிக எளிதில் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. கிட்டத்தட்ட பத்து வருட போராட்டத்திற்கு பிறகு தான் வெற்றியை ருசித்து உள்ளார் வெற்றி வசந்த்.
சிறுவயதிலேயே தந்தை பாட புத்தகத்தில் உள்ளவற்றை கதையாக சொல்லிக் கொடுத்துள்ளார். அதோடு 50 பேர் இருந்தாலும் சத்தமாக படிக்க வேண்டும் மேடையில் பேச அஞ்ச கூடாது எனும் அவரது தந்தை மற்றும் தமிழ் ஆசிரியர் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்துள்ளனர்.
அதனால் தன்னுடைய ஏழாம் வகுப்பிலேயே மேடை ஏறி திருவிளையாடல் தருமி வேடம் வேஷம் போட்டார். பி இன்ஜினியரிங் முடித்துவிட்டு வேந்தர் தொலைக்காட்சியில் ஆடிஷனுக்காக சென்றுள்ளார். அப்போது அவர் நிராகரிக்கப்பட்டதால் மிகுந்த மனம் வேதனை அடைந்து இனிமேல் ஆடிஷனுக்கே போகக்கூடாது என்ற முடிவு எடுத்து விட்டார்.
சிறகடிக்க ஆசை முத்து கடந்து வந்த பாதை
அதன் பிறகு செக்யூரிட்டியாக வேலை பார்த்த நிலையில் அதிலும் சம்பளம் கிடைக்கவில்லை. சினிமா ஆசை அவரை விட்டு இன்னும் போகாததால் சீம ராஜா படத்தின் செட் செக்யூரிட்டியாக வேலை பார்த்துள்ளார். அதன் பிறகு மிமிக்ரி, யூடியூப் சேனல் போன்றவற்றிலும் ஆர்வம் காட்டி வந்தார்.
தனது நண்பன் சீரியலில் நடித்த நிலையில் அவருக்கு அசிஸ்டெண்ட் ஆக வேலை பார்த்தார். இப்படியே 8 வருடங்கள் போன பிறகு அதன் பிறகு தான் தனது கடந்து வந்த வாழ்க்கையை பார்த்தார். நாம் ஒன்றுமே சாதிக்கவில்லையே என்று அப்போதுதான் ஷார்ட் பிலிம் எடுக்க ஆரம்பித்தார்.
அதில் அவரே கதை வசனம், எழுதி வந்த நிலையில் சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். அப்போது தான் ஃபர்ஸ்ட் நைட் டேட்டிங் என்ற ஷார்ட் பிலிம் ஆல் அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. அந்த ஷார்ட் பிலிம் பார்த்த பிறகு தான் இயக்குனர் குமரன் வெற்றி வசந்தை அழைத்து சிறகடிக்க ஆசை தொடரில் கதாநாயகனாக நடிக்க வைத்தார். இப்போது பட்டி தொட்டி எங்கும் இவரின் புகழ் பரந்து கிடைக்கிறது.