Covishield: கடந்த நாட்களாகவே சமூக வலைதளங்களில் கோவி ஷீல்டு தடுப்பூசி தான் வைரலாகி வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டால் ரத்தம் உறையும் பிரச்சனை அரிதாக வரும் என அதை கண்டுபிடித்த நிறுவனம் ஒப்புக் கொண்டிருந்தது.
இது கடும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து இந்த தடுப்பூசியை திரும்பவும் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் லண்டன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஊசியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் காருண்யா, ரிதாய்கா என இரு பெண்கள் உயிரிழந்ததாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி
இப்படி கடும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் இந்த தடுப்பூசியை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த செய்தி தான் தற்போது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அப்படி என்றால் ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதைத்தான் பொதுமக்களும் தங்களது சோசியல் மீடியாக்களில் கேட்டு வருகின்றனர்.
ஏற்கனவே இந்த தடுப்பூசி விவகாரத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கலாய்த்து வந்தனர். அதில் தற்போது வெளியான செய்தியையும் இனி நீ வயசுக்கு வந்தா என்ன வராட்டி என்ன என புண்பட்ட மனதை மீம்ஸ் போட்டு சமாதானப்படுத்தி வருகின்றனர்.