Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி தெரிஞ்சோ தெரியாமலோ பல தில்லாலங்கடி வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். அதனால் அவருக்கு மட்டுமல்லாமல் பிள்ளைகளுக்கும் ஒரு நிம்மதி இல்லாமல் அலையும் வகையில் ஒவ்வொரு பிரச்சனையில் சிக்கி தவிக்கிறார்கள்.
தற்போது வயசுக்கு மீறி செஞ்ச வேலையால் குடும்பத்தில் இருப்பவர்களிடம் எப்படி உண்மையை சொல்ல என்று தெரியாமல் முழித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தான் அப்பாவாக போகும் உண்மையை முதலில் அம்மாவிடம் சொல்லிவிடலாம் என்று ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டார். இதை தெரிந்ததும் ஈஸ்வரி, ராதிகாவை சந்தித்து இந்த குழந்தை வேண்டாம்.
குடும்ப இருக்க சூழ்நிலையில் இதெல்லாம் தேவையா என்று கேட்டார். அதற்கு ராதிகா இது ஒன்னும் என்னுடைய குடும்பம் இல்லை. நான் ஏன் இதையெல்லாம் பற்றி கவலைப்பட வேண்டும். எனக்கு பள்ளிக்கூடம் போகிற வயதில் ஒரு பொண்ணு இருக்கிறாள். அதனால் எனக்கு தவறாக தெரியவில்லை நான் குழந்தையை பெற்று எடுப்பேன் என்று ஈஸ்வரிடம் சொல்லிவிட்டார்.
வசமாக மாட்டிய கோபி
இதனை தொடர்ந்து ராதிகா, கோபியிடம் உடனே வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் இந்த உண்மை தெரிஞ்சாக வேண்டும். அதனால் எல்லாரையும் வரச் சொல்லி நீங்கள் அப்பாவாக போகிற விஷயத்தை சொல்லுங்கள் என்று அனைவரையும் வர வைத்து விட்டார். ஆனால் கோபி எப்படி இந்த உண்மையை பசங்க முன்னாடி சொல்வது என்று தெரியாமல் தட்டு தடுமாறுகிறார்.
இதையெல்லாம் பார்த்த பாக்கியா கொஞ்சம் மாஸாக கால் மேல் கால போட்டு கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் செம ஆட்டிட்யூட் காட்டுகிறார். இதையெல்லாம் பார்த்த கோபி தொடர்ந்து உண்மை சொல்ல முடியாமல் நிற்கிறார். உடனே மகன்கள் அனைவரும் என்ன விஷயம் என்று சொல்லுங்கள். எங்களுக்கு வேலை இருக்கிறது நேரத்தை வேஸ்ட் பண்ணாதீர்கள் என்று சொல்கிறார்கள்.
ஆனாலும் கோபியால் எந்த உண்மையும் சொல்ல முடியாத சூழ்நிலையில் தவித்ததால் பாக்கியா அங்கிருந்து எழுந்து வந்து ஒரு சின்ன விஷயம் சொல்வதற்கு ஏன் இவ்வளவு யோசிக்கணும் என்று சொல்கிறார். உடனே வேறு ஒன்றும் இல்லை உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போகிறார் என்று சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுத்து விடுகிறார்.
இதைக் கேட்டு ஒவ்வொருவரும் அதிர்ச்சியில் திகைத்துப் போய் நிற்கப் போகிறார்கள். தொடர்ந்து கோபி மகன்களையும் இனியவையும் எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் ஒரு கேள்விக்குறியாக இருக்கப் போகிறது. ஆனாலும் இதையெல்லாம் பற்றி கவலை கொள்ளாமல் ராதிகா குழந்தையை பெற்றெடுத்து ஈஸ்வரி குடும்பத்தில் ஒரு பூகம்பத்தை வெடிக்க வைக்கப் போகிறார்.
இத்தனை நாள் வரை ஓவராக ஆட்டம் போட்டு என்னுடைய குழந்தைகள் மீது எனக்கு பாசம் இருக்கிறது என்று அதிகமாக டிராமா போட்டு வந்த கோபிக்கு பாக்கியா முடிவு கட்டிவிட்டார். அத்துடன் கோபி மற்றும் ராதிகாவை கையோடு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டால் இன்னும் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.