சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Chennai: பணத்தை கொடுத்து மானத்தை வாங்கும் ஆன்லைன் ஆப்.. மார்பிங் போட்டோவால் தற்கொலை செய்த இளைஞர்

Chennai: எவ்வளவுதான் சம்பாதித்தாலும் கைல காசு நிக்க மாட்டேங்குது என்கிற புலம்பல எல்லா பக்கமும் பார்க்க முடிகிறது. விலைவாசி ஒரு பக்கம் ஸ்கூல் பீஸ் என ஒவ்வொன்றும் குடும்ப தலைவர்களின் கழுத்தை நெருக்குகிறது.

அதனாலயே சிலர் கந்து வட்டி, பேங்க் லோன் என கடன் வாங்கி வருகின்றனர் அது மட்டுமின்றி இப்போது ஆன்லைன் ஆப் மூலம் கடன் கொடுக்கும் வசதியும் இருக்கிறது.

அதுவே இப்போது ஒரு இளைஞரின் உயிரை பறித்திருக்கிறது. சென்னை புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கோபிநாத் என்பவர் ஆன்லைன் ஆப் மூலம் ஒரு குறிப்பிட்ட தொகையை கடன் வாங்கி இருக்கிறார்.

அந்த பணத்தை அவர் கட்டிய பிறகும் கூட சம்பந்தப்பட்ட செயலியில் இருந்து பணம் கேட்டு தொந்தரவு செய்து இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் அவருடைய போட்டோவை தவறாக மார்பிங் செய்து உறவினர்களுக்கு அனுப்பி இருக்கின்றனர்.

பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கோபிநாத் தற்போது தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அவர் இறப்பதற்கு முன்பு இந்த கொடுமையை தன்னுடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் பதிவு செய்திருக்கிறார்.

இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து தற்போது போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணையையும் முடுக்கி விட்டுள்ளனர்.

இப்போது ஆன்லைன் செயலியின் மூலம் பணம் பெறுவது அதிகரித்து வருகிறது. அதில் சிலர் நியாயமாகவும் சில ஆப் இதுபோன்ற வேலையையும் செய்து வருகின்றனர்.

இதைப் பற்றி சில நெட்டிசன்கள் கூறுகையில் பைசா என தொடங்கும் ஒரு ஆப் இது போன்ற வேலையை செய்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அதனால் காவல்துறை இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Trending News