Uyir Thamizhukku movie review:ஒரு பானை சோற்றுக்கு ஒரு பருக்கை பதம்னு சொல்லுவாங்க. அப்படித்தான் இயக்குனர் அமீரின் நடிப்பு. வடசென்னை படத்தில் ராஜன் கேரக்டரில் அவர் நடித்ததன் மூலமே எப்பேர்பட்ட நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்து விட்டது. அவருடைய நடிப்பில் உயிர் தமிழுக்கு படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.
கதர் சட்டை, கதர் வேட்டியில் அமீர், படம் பெயர் உயிர் தமிழுக்கு என்ற உடன் தமிழை பற்றி பேசி கொலையா கொல்லப் போறாங்கன்னு நெனச்ச எல்லோருடைய எண்ணமும் போயிடுச்சு. படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் சாந்தினியின் பெயர் தமிழ்ச்செல்வி.
அப்போ உயிர் தமிழுக்கு என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று புரிகிறதா. அரசியல் ஆட்டத்தில் நிறைய காதல் கதைகளை பார்த்திருப்போம்.. ஆனால் இந்த படம் காதலுக்காக செய்யப்பட்ட அரசியல். இந்தப் படத்தில் இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், சுப்பிரமணியம் சிவா, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
தளபதி முதல் கமல் வரை வெச்சு செஞ்ச அமீர்
கேபிள் ஆபரேட்டராக இருக்கும் பாண்டியன் தன்னுடைய காதலிக்காக அரசியல்வாதியாக ஆவது தான் கதை. காதலிக்காக கண்டன பொதுக்கூட்டம், நன்றி அறிவிப்பு கூட்டம் என கலக்குகிறார் அமீர். படத்தின் பெரிய பிளஸ் இந்த காலத்து அரசியலை வச்சு செய்வதுதான்.
சமாதி முன் தியானம், ஓட்டு மிஷினை நம்பிய அரசியல் செய்வது, நடிகர்கள் அரசியலுக்கு வருவது என எல்லா கான்செப்ட்டையும் உள்ளே கொண்டு வந்து வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் ஆதம் பாவா.
சாந்தினியின் அப்பா இறந்து போக அந்த கொலை பழி அமீரின் மீது விழுகிறது. அதிலிருந்து அவர் தப்பித்து எப்படி வெளியே வருகிறார், சாந்தினி உடன் எப்படி இணைகிறார் என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி அரசியல் நையாண்டியை மையப்படுத்தி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது.
இரண்டாவது பாதி கொஞ்சம் டல்லடித்தாலும் சினிமாவில் லாஜிக் பார்க்கக் கூடாது என்று சொல்லி ஒரு தடவை படத்தை பார்த்து கவலை மறந்து சிரித்து விட்டு வரலாம். அமீருக்குள் இருக்கும் யதார்த்த நடிகன் திரையில் மக்களை சிலிர்க்க வைத்திருக்கிறார்.