Ajithkumar: பைக் ரைடு என்ற பெயரில் அஜித் செய்யும் அக்கப்போர்.. நீங்க பாக்கிற எதுமே உண்மை இல்லை மக்களே!

Ajithkumar: நடிகர் அஜித்குமார் பைக் ரைடு போகும் போட்டோ மற்றும் வீடியோக்களை பார்க்கும்போது இவர மாதிரி ஒரு வாழ்க்கை வாழனும்னு எல்லாருக்குமே தோணும். இருக்கிற கஷ்டத்தை எல்லாம் மறந்துட்டு தனியா ஒரு இடத்துக்கு பயணிப்பதும் ஒருவித சுகம்தான்.

அஜித் மாதிரி ஒரு நாள் பைக் எடுத்துட்டு எங்கேயாவது தொலைதூர பயணம் செய்யணும்னு எல்லோருக்குமே மனசு ஓரத்தில் ஒரு ஆசை இருக்கும். ஆனால் அஜித் இந்த பைக் ரைட எப்படி பண்றாருன்னு கேள்விப்பட்ட பிறகு, அட நமக்கு எதுக்குடா இந்த பொழப்பு என்று தோன்ற வைக்கிறது.

வலைப்பேச்சு யூடியூப் சே.னல் அந்தணன் சமீபத்தில் பேட்டி ஒன்றை கொடுத்து இருக்கிறார். அதில் அஜித் பைக் ரைடு போவது பற்றி பேசி இருக்கிறார். பாக்கெட்டில் கொஞ்சம் காசை, வச்சுட்டு பைக்கை எடுத்துக்கிட்டு நெனச்ச இடத்துக்கு எல்லாம் அஜித் போயிட்டு வரல.

அதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. சாமானிய மக்கள் கூட ஒரு சில நேரங்களில் ஊர் விட்டு ஊர் போகும்போது ஏதாவது ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்வது உண்டு. அப்படி இருக்கும்போது இவ்வளவு பெரிய நடிகர் எப்படி இப்படி அசால்ட்டாக பைக்கை தூக்கிக்கொண்டு சுத்திட்டு வர்றாருன்னு எல்லோருக்குமே ஒரு சந்தேகம் இருந்திருக்கும்.

நீங்க பாக்கிற எதுமே உண்மை இல்லை மக்களே!

அஜித் பைக் எடுத்துட்டு போறதுக்கு பின்னாடி ஒரு பெரிய கூட்டமே வேலை செய்கிறது. அதாவது அஜித் பைக்கை பாலோ பண்ணி ஒரு ஜீப் முழுக்க அவருடைய உதவியாளர்களும், நண்பர்களும் போகிறார்களாம்.

அதற்கு பின்னாடி அஜித்தின் கேரவன் செல்லுமாம். அதில் தான் அஜித்திற்கு தேவையான பொருள்கள், உடைகள், சமைத்து சாப்பிட தேவையான எல்லா விஷயமும். இருக்குமாம் அஜித்துக்கு ஓய்வு தேவைப்படும் போது இந்த கேரவனில் ஓய்வு எடுத்துக் கொள்கிறாராம்.

அது மட்டும் இல்லாமல் அந்த கேரவனுக்கு பின்னாடி ஒரு வண்டியில் இரண்டு பைக்குகள் போகுமாம். அவர் ஓட்டி செல்லும் பைக் ரிப்பேர் ஆகும் சமயத்தில் இதிலிருந்து ஒரு பைக்கை எடுத்துக் கொண்டு மீண்டும் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார்.

அஜித் வெயில்ல வண்டி ஓட்ற மாதிரி, தனியா உக்காந்து இருக்கிற மாதிரி எடுக்கப்படும் புகைப்படங்கள் வீடியோக்கள் எல்லாமே அவருடைய நண்பர்களால் எடுக்கப்படுகிறது. அஜித் என்ற ஒரு தனிமனிதன் பைக் எடுத்துக் கொண்டு ரைடுக்கு போவதற்கு பின்னால் கிட்டத்தட்ட ஒரு பெரிய கூட்டமே வேலை செய்து கொண்டிருக்கிறது.

இது தெரியாமல் எங்க தலைவனை மாதிரி நாங்களும் பைக் எடுத்துக்கிட்டு லடாக் போறோம்னு யாரும் கிளம்பிடாதிங்க. டிஸ்கவரி சேனலில் மேன் வெஸ் வைல்ட் என்ற ஒரு நிகழ்ச்சி இருக்கும். அந்த மனிதர் உண்மையாகவே காட்டில் தனியாக மாட்டிக் கொண்டு கஷ்டப்படுகிறார் என்று நம்பிய 90ஸ் கூட்டம்தான் பலரும்.

அதன் பின்னர் தான் அந்த நிகழ்ச்சிக்காக ஒரு கூட்டம் வேலை செய்து கொண்டிருக்கிறது என்று தெரிந்தது. அப்படித்தான் 96 பட விஜய் சேதுபதி மாதிரி ‘வாழாய் என் வாழ்வை வாழவே’ என்று அஜித் கிளம்புகிறார் என நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். அதுவும் இல்லை என்று ஆகிவிட்டது.

Next Story

- Advertisement -