Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், எதற்கெடுத்தாலும் பாய்ஞ்சுகிட்டு அனைத்தையும் கெடுத்து வந்த குணசேகரன் இப்பொழுது கமுக்கமாக இருந்து குடும்பத்தில் இருப்பவர்களுக்கு விஷ பாம்பாக மாறிவிட்டார். இது தெரியாமல் நாங்கள் சாதித்து தான் இந்த வீட்டை விட்டுப் போகும். அதுதான் குணசேகரனுக்கு கொடுக்கப் போகும் தோல்வி.
எங்களுக்கு கிடைக்கும் வெற்றி என்று வாய்சவடால் விட்டு இன்னும் அந்த வீட்டிலேயே குப்பை கொட்டிக்கிட்டு இருக்கிறார்கள் குணசேகரன் வீட்டு மருமகள்கள். இதற்கிடையில் ஞானம் ஒரு முட்டாள் பீஸ் என்று சொல்வதற்கு ஏற்ப இவரை மாதிரி இருக்கும் கரிகாலனிடம் மொத்த பணத்தையும் கொடுத்து ஏமாந்து தற்போது தற்குறியாக நிற்கிறார்.
இதனால் இனி இவரை நம்பி ஒரு பிரயோஜனமும் இல்லை நாம் தான் களத்தில் இறங்க வேண்டும் என்று ரேணுகா முடிவெடுத்து விட்டார். அதே மாதிரி கதிரும் எந்த வேலைக்கும் போவதாக தெரியவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்காமல் மல்லுவேட்டி மைனர் ஆகத்தான் சுற்றிக்கொண்டு வருகிறார். அதனால் நந்தினி கூடிய விரைவில் சமையல் செய்து அவருடைய குடும்பத்தை காப்பாற்றி ஆக வேண்டும் சூழ்நிலையில் இருக்கிறார்.
குள்ளநரி கூட்டத்தை சேர்ந்த குணசேகரன்
இதற்கிடையில் ஜனனி பிசினஸ் பண்ணி பெண் தொழிலதிபராக மாற வேண்டும் என்று எடுத்த முயற்சியில் தோற்றுப் போய்விட்டார். அதனால் இனி பிசினஸ் எல்லாம் லாயக்கில்லை என்று வேலையில் சேர்வதற்கு முடிவெடுத்துவிட்டார். அந்த வகையில் தற்போது வேலையில் சேர்வதற்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் ஜனனிக்கு கிடைத்துவிட்டது.
தற்போது ஜனனி எடுத்து வைக்கப் போகும் முதல் அஸ்திவாரத்துக்கு நந்தினி,ரேணுகா மற்றும் ஈஸ்வரி ஆசிர்வாதம் பண்ணுகிறார்கள். இதில் ரேணுகா, ஜனனி வேலைக்கு போகும்போது அவருக்கு யார் கண்ணும் பட்டுவிடக்கூடாது என்பதற்காக சுத்தி போடுகிறார். அப்பொழுது அங்கே குணசேகரன் மற்றும் விசாலாட்சி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் ரேணுகா, ஜனனிக்கு சுத்தி போடும்போது மூத்தார் கண்ணு, மூதாட்டி கண்ணு, துரத்தி விட்டாலும் திரும்ப வர கண்ணு எல்லா கண்ணும் பட்டு போகட்டும் என்று ஜாடம் மாடையாக பேசுகிறார்கள். உடனே நந்தினி, ஜனனிடம் இனி நம்ம பசங்க சாப்பிடுவதற்கு பள்ளிக்கூடம் போறதுக்கு எல்லா தேவைகளையும் நம்மளால பூர்த்தி பண்ண முடியுமா என்று கேட்கிறார்.
அதற்கு ஈஸ்வரி முடியும்னு நம்புவோம் நந்தினி இப்போதைக்கு நம்மகிட்ட இருக்க ஒரே விஷயம் அதுதான் என்று சாதிக்கப் போகிற சந்தோசத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் இந்த நேரத்தில் கரிகாலன் குணசேகரன் வீட்டிற்குள் நுழைகிறார். எந்த தைரியத்தில் இவர் வருகிறார் என்றால் குணசேகரன் இருக்கும் தைரியத்தில் தான். அந்த வகையில் திருந்தாத கரிகாலன் மறுபடியும் குணசேகரன் காலில் விழுந்து தஞ்சமடைய போகிறார்.
அடுத்து ஜனனி வேலைக்குப் போகும் இடத்திலும் குணசேகரனுக்கு செல்வாக்கு இருக்கப் போகிறது. அதை பயன்படுத்தி ஜனனியின் வேலையில் குடைச்சல் கொடுக்கும் அளவிற்கு சர்வாதிகாரம் பண்ண ஒரு சம்பவம் செய்யப் போகிறார். பிறகு இதனால் மறுபடியும் துவண்டு போன ஜனனி இனி யாரிடமும் வேலை தேட வேண்டாம். நம் அனைவரும் சேர்ந்து ஒரு வேலையை உருவாக்கும் என்று ஒட்டுமொத்த புரட்சியை ஏற்படுத்தி கைகோர்க்க போகிறார்கள்.