செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

Ethirneechal: நந்தினிக்கு பெரிய ஆப்பை வைக்க போகும் குணசேகரன்.. 1000 எபிசோடு வந்தாலும் இது மட்டும் வாய்ப்பில்ல ராஜா

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், ரேணுகா அம்மா கொடுத்த பணத்தை வைத்து முன்னுக்கு வந்துவிடலாம் என்று ஞானம் முதல் அஸ்திவாரத்தை போட்டார். ஆனால் அதில் மண்ணள்ளி போடும் விதமாக குணசேகரன் போட்ட ஸ்கெட்ச் படி கரிகாலன் அனைத்தையும் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டார். தற்போது கையில் ஒன்றும் இல்லாமல் பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறேன் என்று ஞானம் புலம்பும் படியாக அமைந்துவிட்டது.

இவர்களுக்கு அடுத்தபடியாக நந்தினி அப்பா கதிருக்கு ஏதாவது ஒரு உதவி பண்ண வேண்டும் என்ற நினைப்பில் மொய் விருந்து வைத்து அதன் மூலம் பணத்தை கொடுக்க முடிவெடுத்து விட்டார். இதற்கான வேலைகள் அனைத்தையும் நந்தினி அப்பா செய்து வருகிறார். அதற்கான பத்திரிகையை ரெடி பண்ணி குணசேகரன் வீட்டில் கொடுக்கிறார்.

ஒவ்வொருவருக்கும் வலை விரித்து வரும் குணசேகரன்

அதை பார்த்த நந்தினி, ஞானத்திற்கு முதல் மரியாதை கொடுக்கும் விதமாக நீங்கள் தான் அவருக்கு அடுத்தபடியாக மூத்தவர். நீங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்கள் என்று நந்தினி ஞானத்திடம் சொல்கிறார். இதனை தொடர்ந்து ஞானம் என்னுடைய பங்குக்கு எந்த உதவியும் பண்ண முடியாமல் பிச்சைக்காரன் மாதிரி இருக்கிறேனே என்று சக்தியிடம் சொல்லி புலம்புகிறார்.

உடனே சக்தி காசு பணம் இல்லை என்றால் என்ன. நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தாலே நாம் நினைத்த காரியத்தில் ஜெயித்து விடலாம் என்று ஜனனிக்கு அடுத்தபடியாக வாய் சாவடால் விட்டு பேசுகிறார். ஆனால் இதையும் கெடுக்கும் விதமாக குணசேகரன் இருந்த இடத்திலேயே அனைத்தையும் அளிக்கும் விதமாக பிளான் பண்ணிவிட்டார்.

அதற்கு ஏற்ற மாதிரி நந்தினி அப்பா ஏற்பாடு பண்ணின மொய் விருந்து நிகழ்ச்சியில் ஏதாவது குளறுபடி பண்ணி நந்தினிக்கு பெரிய ஆப்பை வைக்கப் போகிறார். இதனால் நந்தினி மற்றும் கதிருக்கு பெருத்த அடியாக இருக்கப் போகிறது. இதற்கு இடையில் ஞானம் விஷயத்திலும் குணசேகரன் தான் உள்ளே நுழைந்து அனைத்தையும் ஆட்டையை கலைத்து இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனாலும் குணசேகரை எதிர்த்து ஒன்னும் பண்ண முடியாததால் வாயை மூடிக்கொண்டு வழக்கம் போல் வேடிக்கை பார்க்கிறார்கள். அந்த வகையில் நந்தினி கதிருக்கு குடைச்சல் கொடுக்கும் விதமாக அடுத்த கட்ட நடவடிக்கையை குணசேகரன் கமுக்கமாக இருந்து காய் நகர்த்தப் போகிறார். பிறகு கதிரும் இதில் ஒன்னும் பண்ண முடியாமல் புலம்ப ஆரம்பித்து விடுவார்.

பிறகு மீதம் இருக்கும் ஈஸ்வரி மற்றும் ஜனனி அவர்களுடைய சொந்தக்காலில் நின்னு ஜெயிக்கப் போகிறார்கள். அதன் பின் ரேணுகா மற்றும் நந்தினி அவர்களுக்கு தெரியும் பிசினஸை தொடங்குவார்கள். இவர்களுக்கு பக்க பலமாக ஒரு சப்போர்ட்டாக கதிர் மற்றும் ஞானம் நிற்கும்படி அமையப் போகிறது. ஆனால் இதில் கடைசி வரை சக்தி மட்டும் எந்த ரகம் என்று தெரியாமல் புரியாத புதிராகத்தான் இருக்கிறார்.

அந்த வகையில் 1000 எபிசோடு வந்தாலும் இவர்கள் ஜெயிப்பது மாதிரி எந்த ஒரு விஷயமும் நடக்க வாய்ப்பில்லை என்பது போல் தான் தெரிகிறது. இதற்கு பேசாமல் பருத்திமூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம். அதாவது அடிமையாக குணசேகரனிடமே தஞ்சமடைந்து அண்டி பிழைத்திருக்கலாம்.

Trending News