திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

Thalaivar: ரஜினி காலடியிலேயே முளைத்த காளான்.. சூப்பர் ஸ்டார் கட்டி காப்பாற்றியும் மதிக்காத அந்த நபர்

ரஜினிகாந்த் தன்னுடைய வாரிசுகளுக்கும், தன்னை சந்திக்க வரும் அனைத்து நெருங்கிய நண்பர்களுக்கும் சொல்லும் அறிவுரை, நல்ல கதைகளை கொண்டு படத்தை இயக்குங்கள் ஆனால் தயவுசெய்து படம் தயாரிக்கும் வேலைகளை மட்டும் செய்யாதீர்கள் என்பதுதான்.

இப்பொழுது அவர் காலடியிலேயே ஒரு காளான் முளைத்தது போல, ரஜினிக்கு எல்லாமுமாய் இருந்த ஒரு நபர் தேவையில்லாத வேலை செய்து மாட்டிக்கொண்டார். சூப்பர் ஸ்டார் குடும்பத்திற்கு வலது கரமாக இருந்தவர் சஞ்சய் என்ற நபர். ரஜினியின் எல்லா வேலைகளையும், அந்த குடும்பத்தின் அனைத்து பொறுப்புகளையும் சுமந்தவர் சஞ்சய்.

சூப்பர் ஸ்டார் கட்டி காப்பாற்றியும் மதிக்காத அந்த நபர்

எல்லாவற்றிற்கும் மேலாக சஞ்சய் தன்னுடைய ஒரு கிட்னியை ரஜினிக்கு கொடுத்து, அவர் உயிரை காப்பாற்றினார். ஒரு கட்டத்திற்கு மேல் ரஜினி அவரை வெளியே அனுப்பினாரா இல்லையென்றால் அதிருப்தி காரணமாக அவரே வெளியேறினாரா என்று தெரியவில்லை.

இப்பொழுது சஞ்சய், ரஜினியின் குடும்பத்தில் இல்லை. அவர் வெளியேறும்போது சூப்பர் ஸ்டார் ஒரு பெரும் தொகையை கொடுத்து பிசினஸ் செய்து பிழைத்துக் கொள்ளும்படி உதவியுள்ளார். ஆனால் அவரோ ரஜினிக்கு தெரியாமல் நயன்தாரா நடித்த அன்னபூரணி படத்தை தயாரித்துள்ளார். இப்பொழுது யோகி பாபு வைத்து ஒரு படம் தயாரிக்க உள்ளார். இதில் அன்னபூரணி படம் பெரும் நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது. இப்படி நெருங்கியவர் கஷ்டப்படக் கூடாது என்று ரஜினி கொடுத்த காசெல்லாம் வீரியம் செய்யப்பட்டுள்ளது.

Trending News