விஜய்யின் பிறந்தநாள் என்று ஒரு ஹாட்ஸ்டார் இணையத்தில் ட்ரெண்ட்டாகி கொண்டிருக்கிறது. அதாவது ஜூன் 22 தான் வழக்கமாக விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்படும். அன்று விஜய் ரசிகர்கள் பண்டிகை நாள் போல பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
ஆனால் திடீரென இன்று விஜய்யின் பிறந்தநாள் என்றால் எல்லோருக்குமே ஆச்சரியமாகத்தான் இருக்கும். அதாவது விஜய்யின் நடிப்பில் கடைசியாக லோகேஷின் இயக்கத்தில் லியோ படம் வெளியானது. இதில் பெரிதும் பேசப்பட்டது லியோ தாஸ் கதாபாத்திரம்.
லியோவாக பிறந்த அவர் பல வருடங்களுக்குப் பின்பு பார்த்திபனாக மாறி வாழ்வார். ஆனால் வெளியுலகத்திற்கு பார்த்திபன் ஆக தெரியும் அவர் உள்ளுக்குள் லியோ தாஸாகத் தான் இருந்துள்ளார். அதில் லியோ தாஸின் தோற்றம் மற்றும் மறைவு குறிப்பிடும்படி அர்ஜுன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருப்பார்.
இணையத்தை தெறிக்க விடும் லியோதாஸ் பிறந்தநாள் போஸ்டர்
அதில் லியோ தாஸின் பிறந்தநாளை கண்டுபிடித்து நெட்டிசன்கள் ஹாப்பி பர்த்டே லியோதாஸ் என்ற ஹேஷ் டேக்கை நாளைதான் இப்போது ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதாவது அதில் மே 13, 1997 என குறிப்பிடப்பட்டிருக்கும். அதை கண்டுபிடித்து நெட்டிசன்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
லோகேஷ் மற்றும் விஜய்க்கு இந்த தேதி ஞாபகம் இருக்குமா என்பது சந்தேகம் தான். ஆனால் விஜய் ரசிகர்கள் இவ்வாறு இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறார்கள். மேலும் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபுவின் கோட் படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் விமான நிலையத்தில் துபாய்க்கு சென்ற புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் இந்த வருடம் இறுதியில் கோட் படம் வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.