Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் ஒவ்வொருவருக்கும் வலை விரித்து வருகிறார். இதற்காகத்தான் யாரையும் வெளியே விடாமல் தன் பக்கம் வைத்துக் கொண்டு அவர்கள் முதுகில் குத்தி எந்திரிக்க விடாமல் பண்ணுவதற்காக பிளான் போட்டார். அதன்படி குணசேகரன் விரித்த வலையில் மருமகள்கள் சிக்கிக் கொண்டார்கள்.
அந்த வகையில் கரிகாலனை வைத்து ஞானத்திடம் இருந்த பணத்தை ஏமாற்றி அபகரித்து விட்டார். தற்போது ரேணுகா மற்றும் ஞானத்தை ஒரு மூலையில் முடக்கி விட்டார். இதனை தொடர்ந்து கதிருக்கு ஏதாவது ஒரு நல்லது செய்ய வேண்டும் என்று நந்தினி அப்பா தாராவிற்கு காது குத்தி ஃபங்ஷன் வைத்து மொய் விருந்து விழாவை ஏற்பாடு பண்ணி இருக்கிறார்.
குணசேகரனின் அராஜகம் கூடிக் கொண்டே இருக்கும்
ஆனால் இதில் குணசேகரன் பெயர் எக்காரணத்தை கொண்டும் வந்து விடக்கூடாது என்று சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த மொய் விருந்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி பணம் மட்டும் கிடைத்துவிட்டால் உங்கள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று சவால் விட்டிருக்கிறார்.
இப்படி இவர் சவால் விடும்போதே தெரியுது இதிலியும் புகுந்து ஏதாவது குளறுபடி பண்ணப் போகிறார் என்று. அதற்கு துருப்புச் சீட்டாகத்தான் கரிகாலனை வீட்டிற்கு வர வைக்கிறார். இந்த முட்டாள் பீசு கரிகாலன் எப்போதுமே திருந்தவே மாட்டார் என்பதற்கு ஏற்ப குணசேகரன் என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போட்டு அதை எல்லாம் செய்கிறார்.
அந்த வகையில் கடைசி வரை குணசேகரன் விரித்த வலையில் ஒவ்வொருவரும் பலிகாடாக சிக்கிக் கொண்டே தான் வருவார்கள். குணசேகரன் வீட்டில் இருக்கும் வரை பெண்கள் நினைக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கவே முடியாது. அதை தெரிந்து கொண்டு தான் அந்த சாம்ராஜ்யத்தை சரித்து சிதைக்க வேண்டும் என்று குணசேகரன் வக்ர புத்தியால் ஒவ்வொரு பிளானையும் போட்டு வருகிறார்.
இந்த மருமகளுக்கு மட்டுமல்ல குணசேகரன் தம்பிகளுக்கும் விடிவுகாலம் வேண்டும் என்றால் அந்த வீட்டை விட்டு வெளியே போனால் மட்டும்தான் கிடைக்கும். ஆனால் இவ்வளவு தூரம் ஆனதற்கு பிறகும் ஏன் அந்த வீட்டில் இருந்து குணசேகரன் காலை சுற்றின பாம்பாகவே இருந்து கொண்டு வருகிறார்கள் என்று தெரியவில்லை.
இதனைத் தொடர்ந்து ஜனனிக்கு வேலை கிடைத்து விட்டது. இது சம்பந்தமாக சக்தி, ஜனனிடம் பேச வரும் பொழுது எனக்கும் வேலை கிடைத்துவிட்டது. நானும் சேர்ந்து வேலை பார்த்தல் குடும்பம் கொஞ்சம் நிம்மதி அடையும் என்று பேசிக்கொள்கிறார்.
அத்துடன் இப்படியே பிரச்சனைக்கு பின்னாடி நாம் இருவரும் ஓடிக் கொண்டு போவதால் நம்முடைய சந்தோசமான வாழ்க்கையை நாம் இழந்தது போல் எனக்கு ஒரு உணர்வை கொடுக்கிறது என்று சக்தி ஜனனிடம் சொல்கிறார். உடனே ஜனனி அதற்கு நாம் இப்போது என்ன பண்ணனும் என்று கேட்க அவ்வப்போது நம்ம ரொமான்ஸ் பண்ணிக் கொண்டே இருந்தால் தான் நம்மளுக்கு வயசாகவில்லை என்று ஒரு உணர்வு கொடுக்கும் என சொல்கிறார்.
அந்த வகையில் இவர்கள் இருவரும் இல்லற வாழ்க்கையில் இணைந்து வரும் வேளையில் ஜனனியால் தொடர்ந்து வேலைக்கு போக முடியுமா என்பது கேள்விக்குறியாகி விடும். ஏனென்றால் ஒருவேளை ஜனனி கர்ப்பமாகி விட்டால் அதன் மூலமும் வேலை பார்ப்பதற்கு பல வழிகளில் தொந்தரவு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்த நேரத்தில் ஜனனி வேலைக்கு ஆப்பு வைக்கும் விதமாக சக்தியின் செயல்கள் இருக்கிறது.
ஆக மொத்தத்தில் இவர்களில் யாரும் முன்னேறுவதாக தெரியவில்லை. எதிர்நீச்சல் கதைப்படி வாடி வாசலை தாண்டி திமிரும் காளையாக துள்ளி வருவார்கள் என்பது இப்போதைக்கு நடக்காத ஒரு விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது.