செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

Meena: மீனாவுடன் கிசுகிசுக்கப்படும் தனுஷ்.. பூதாகரமாக வெடிக்கும் சுசித்ராவின் பேட்டி

சுசித்ராவின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக தனுஷை பற்றி அவர் பேசியது தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது சுசித்ராவின் எக்ஸ் கணவர் கார்த்திக் குமாருடன் தனுஷ் தனியாக ஒரே ரூமில் இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இருவரும் மிகவும் மோசமானவர்கள் என்று கடுமையாக சுசித்ரா பேசி இருந்தார். மேலும் பிராங்க் செய்ய வேண்டும் என்பதற்காக ஏதாவது ட்விட்டர் அக்கவுண்ட் அவர்களுக்கு தேவைப்பட்டது. அப்போது தான் என்னுடைய கணக்கை கார்த்திக் தனுஷிடம் கொடுத்துள்ளார்.

மேலும் தனுஷ் மற்றும் மீனா இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக சுசித்ரா கூறியிருந்தார். ஏற்கனவே பயில்வான் ரங்கநாதன் இவர்கள் இருவருக்கும் திருமணம் என்று கூறி பரப்பரப்பை கிளப்பி இருந்தார்.

மீனாவை திருமணம் செய்து கொள்ள உள்ளாரா தனுஷ்

இப்போது மீண்டும் சுசித்ரா சொல்லி உள்ளது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. கடந்த வருடம் மீனாவின் கணவர் சாகர் நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். அதேபோல் கடந்த வருடம் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெரும் முடிவுக்கு வந்திருந்தனர்.

இப்படி இருக்கும் சூழலில் மீனா மற்றும் தனுஷ் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக சுசித்ரா சொன்னது சினிமா வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சினிமா விமர்சகர் அந்தணன் தனது யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார்.

இந்த விஷயம் வேறு யாராவது சொன்னால் கடந்து போய்விடலாம். சினிமாவில் பல வருடங்களாக இருக்கும் சுசித்ரா தனுசுடன் நெருங்கி பழகியவர். இந்த விஷயம் உண்மையா, பொய்யா என்று தெரியாத ஒரு புரியாத இடத்தில் நம்மளை கொண்டு நிறுத்தி இருக்கிறார்.

இது ஏனோ தானோ என்று சுசித்ரா பேசியிருந்தாலும் வரும் காலங்களில் இந்த பிரச்சினை பூதாகரம் எடுக்கும் என்றும் அந்தணன் கூறுகிறார். இப்போது தனுஷின் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் சுசித்ராவின் இந்த பேட்டியால் அவருடைய படங்கள் பாதிப்படைய வாய்ப்பு இருக்கிறது.

Trending News