Ethirneechal: சைக்கோ குணசேகரனுக்கு போட்டியா எதிர்நீச்சலுக்கு வந்த புது கிராக்.. ஷப்பான்னு எல்லாரையும் ஓடவிடும் கதிர்

எல்லாருடைய முகத்திலும் புன்னகை வரும்படி எதிர்நீச்சல் சீரியல் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. இடையில் குணசேகரின் ஆட்டம் மட்டுமே அதிகமாக இருந்தது, இப்பொழுது அந்த வீட்டுப் பெண்கள் தலை எடுக்க ஆரம்பித்து விட்டனர். குடும்பமே நல்ல ஒரு பாசிடிவ் வைபோடு இருக்கிறது.

ஜனனிக்கு புதிதாக ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை கிடைத்து விட்டது. அங்கே அவருடன் வேலை பார்க்கும் ஆட்கள் எல்லோரும் சகஜமாய் பழகினாலும், ஒருவர் வில்லத்தனம் காட்டி வருகிறார். அவர் எந்த மாதிரி கேரக்டர் என்பது இன்னும் பிடிபடவில்லை.

ஷப்பான்னு எல்லாரையும் ஓடவிடும் கதிர்

இதனிடையே ஜனனிக்கு வேலை கிடைத்த விஷயத்தை வீட்டில் சொல்லி மொத்த குடும்பமும் ஆனந்தம் அடைகின்றனர். அதையும் குணசேகரன் ஒட்டு கேட்டு யார் யார் என்னென்ன பண்ணுகிறார்கள் என்று மனதில் வைத்துக் கொள்கிறார். ஜனனி வேலை செய்யும் ஆபீசின் முதலாளி விக்கி.

விக்கி பார்ப்பதற்கு ஒரு மோசமான கிராக் போல தோன்றுகிறார். அவரின் நடவடிக்கையும் அப்படித்தான் இருக்கிறது. குணசேகரனை மிஞ்சும் அளவிற்கு சைக்கோதனம் இவரிடம் காணப்படுகிறது. மறைமுகமாக ஜனனியை கதவின் இடுக்கு வழியே ஒரு மாதிரி பார்க்கிறார். அது எதற்காக என்பது தெரியவில்லை.

இதற்கிடையே குணசேகரன் வீட்டில் கதிரின் அக்கபோர் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. சென்டிமென்ட் கலந்த எமோஷனில் பின்னுகிறார். ஈஸ்வரி காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, அண்ணி நீங்கள் எனக்கு அம்மா போல் என கூறி உச்சி கொட்ட வைக்கிறார். நான் இதுவரை உங்களை என்னென்னவோ பேசி விட்டேன் என்னை மன்னியுங்கள் என கால்களில் விழுந்து கதறுகிறார்