சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Bhakkiyalakshmi: அம்மாவுக்கு சொக்குப்பொடி போட்ட கோபி.. சக்காளத்தி போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய பாக்கியா

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா அதிரடியாக முடிவு எடுத்ததால் கோபிக்கு வீட்டை விட்டு போகும் நிலைமை வந்துவிட்டது. அத்துடன் மகன்களிடமும் மான மரியாதையை இழந்து மொத்தமாக கோபி அசிங்கப்பட்டு விட்டார். இதனால் கடுப்பான ராதிகா உடனே இந்த வீட்டை விட்டு வெளியே போகலாம் என்று கோபியை கூப்பிடுகிறார்.

ஆனால் கோபி நாம் போகும்போது சும்மா போகக்கூடாது அதற்கான எல்லா வேலையும் நான் பார்க்கப் போகிறேன் என்று ஏதோ வில்லன் ரேஞ்சுக்கு பிளான் போட்டார். ஆனால் அந்த பிளான் அனைத்தையுமே பாக்யா தவிடு பொடியாக்கி விட்டார். அதாவது அம்மாவிடம் சென்டிமெண்டாக பேசினால் எல்லாமே சரியாகிவிடும் என்று கோபி பிளான் பண்ணினார்.

புலம்பித் தவிக்க போகும் கோபி

அதற்காக ஈஸ்வரி இடம் போயி அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி நான் ராதிகாவை கல்யாணம் பண்ணினது தவிர மற்ற எந்த தவறுமே பண்ணலையே. அதுவும் எனக்கு பிடித்த ஒரு வாழ்க்கை நான் வாழ ஆசைப்பட்டது தவறா என்று நல்லவர் போல் அம்மா மனதை உருக உருக சொக்குப்பொடி போட்டு பேசி விட்டார்.

கடைசியாக நான் உங்களை விட்டு பிரிந்து போய் இருப்பதற்கு செத்துப் போகிறேன் என்று கடைசி அஸ்திவாரத்தை போட்டு ஈஸ்வரியை கவிழ்த்து விட்டார். உடனே ஈஸ்வரியும் சரி நானும் உன்னுடன் சேர்ந்து வருகிறேன் என்று கோபி பிளான் பண்ண படி ஈஸ்வரியும் விழுந்து விட்டார். பிறகு இந்த விஷயத்தை ராதிகாவிடம் கோபி சொல்லுகிறார்.

அதாவது என்னை இந்த அளவுக்கு அவமானப்படுத்தி அசிங்கப்பட்ட குடும்பத்தை நான் சும்மா விட போவதில்லை. தற்போது நம்முடன் சேர்ந்து என்னுடைய அம்மாவும் வருவார்கள் என்று கூறுகிறார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ராதிகா ஷாக் ஆகி அவர்கள் வந்தால் எப்படி நாம் சந்தோஷமாக இருக்க முடியும் என்று கேட்கிறார். உடனே கோபி நீயும் உன் அம்மா பிள்ளைகள் என்று ஒன்றாக இருக்கும் பொழுது நாம் மட்டும் தனியாக இருக்க முடியுமா என்று கேட்கிறார்.

அதற்கு ராதிகா நான் தான் உங்களுக்காக இருக்கேனே அப்புறம் என்ன என்று கேட்கிறார். இருந்தாலும் என்னால் அம்மாவை விட்டு தனியாக இருக்க முடியாது. அம்மாவையும் கூட்டிட்டு போகலாம் என்று ராதிகாவிடம் கோபி சொல்கிறார். பிறகு ராதிகா எப்படியும் ஈஸ்வரி நம்முடன் வரும்பொழுது பாக்யா அதற்கு விடமாட்டார். ஏனென்றால் பாக்யாவை பொறுத்தவரை மாமியாருக்கு முழு பாசத்தையும் காட்டி ஓவராக உருகுவார்.

அதனால் கடைசியில் எப்படியும் ஈஸ்வரி நம்முடன் வர மாட்டார் என்று தைரியமாக வீட்டை விட்டு கிளம்ப முடிவு எடுத்து விட்டார். இதனைத் தொடர்ந்து கோபி, ராதிகா பெட்டி படுக்கையை எடுத்து வீட்டை விட்டு கிளம்பிய நிலையில் ஈஸ்வரியும் பெட்டியை எடுத்துக்கிட்டு அவர்களுடன் கிளம்பி விட்டார். இதை பார்த்த பாக்கியா தாராளமா நீங்க போங்க என்று சொல்வதற்கு ஏற்ப ரியாக்ஷன் கொடுத்து ஈஸ்வரியை வழி அனுப்பி வைத்துவிட்டார்.

உடனே ஈஸ்வரி, நான் எப்ப போவேன் என்றுதான் காத்துக் கொண்டிருந்தாயா என்று பாக்கியவை பார்த்து கேட்கிறார். அதற்கு பாக்கியா நான் எதுவுமே சொல்லலையே. இது நீங்களா எடுத்த முடிவு உங்களுடைய இஷ்டம் என்று சொல்லிவிட்டார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ராதிகா மொத்த பிளானும் சொதப்பிட்டே என்று அதிர்ச்சி ஆகிவிட்டார்.

இதனை தொடர்ந்து ஈஸ்வரி, கோபி ராதிகா உடன் சேர்ந்து வீட்டிற்கு போகிறார்கள். அங்கே ராதிகா அம்மா ஈஸ்வரியை பார்த்து அதிர்ச்சியாகி நிற்கிறார். இனி இந்த இரண்டு பாட்டிக்கும் இடையில் வரும் சண்டையில் கோபி மற்றும் ராதிகா மண்டை உடைய போகிறது. அப்பொழுதுதான் ஈஸ்வரிக்கு பாக்கியாவின் அருமையும் கோபியின் புத்தியும் புரியவரும்.

Trending News