Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் பெண் எந்த மாதிரியான சிக்கல்களை சந்தித்து போராடி வருகிறார் என்பதுதான் இந்த சீரியலின் கதை.
இதில் இப்போது ஒரு முக்கோண காதலும் சேர்ந்து கொண்டது. ஆனந்தியை உருகி உருகி காதலிக்கும் அன்பு தன்னை நேரடியாக வெளிப்படுத்திக் கொள்ள தயங்கி அழகன் எனும் கேரக்டரில் அவளுடன் போனில் பேசிக்கொண்டு இருந்தான்.
அன்பை பார்த்தால் வெறுப்பதும், அழகனிடம் பேசும் போது காதலில் உருகுவதும் என்று ஆனந்தி சிக்கலான ஒரு சூழ்நிலையில் இருக்கிறார். அது மட்டுமல்லாமல் ஆனந்தி வேலை செய்யும் கம்பெனியின் ஓனர் மகன் மகேஷ் ஒரு தலையாக ஆனந்தியை காதலித்து வருகிறான்.
இது போன்ற ஒரு சூழ்நிலையில் மகேஷின் காதலை தன் பக்கம் திருப்ப மித்ரா ஆனந்தியை அவன் முன் கெட்டவளாக காட்ட வேண்டும் என திட்டமிடுகிறாள். அதற்கு ஏற்ற மாதிரி அழகன் என்னும் கேரக்டரில் தான் செட் பண்ணிய ஆலை ஆனந்தி முன் தோன்ற வைப்பது தான் இப்போது மித்ராவின் திட்டம்.
மித்ரா செட் பண்ணிய நந்தா கோவிலில் ஆனந்தி முன் அழகன் எனும் கேரக்டரில் வர இருப்பதோடு புதன்கிழமை எபிசோடு முடிக்கப்பட்டது. இதனால் நேற்றைய எபிசோடு மீது அதிக எதிர்பார்ப்பு மக்களுக்கு இருந்தது. மிகையாக சொல்லப்போனால் அடுத்து என்ன ஆகும் என்று சீரியல் பார்ப்பவர்களுக்கு ரத்த கொதிப்பு வந்தது தான் மிச்சம்.
நேற்றைய எபிசோடில் மகேஷ் சொல்ல விளக்கு பூஜையை ஆனந்தி செய்து கொண்டிருக்கும் போது நந்தா அவள் முன் தோன்றுகிறான். நான் தான் உன்னுடைய அழகன் என்று சொல்ல ஆனந்தி திக்கு முக்காடி போய் நிற்கிறாள்.
அதே நேரத்தில் அன்பு ஒரு பக்கம், மகேஷ் ஒரு பக்கம் என ஆனந்தியை தேடி வருகிறார்கள். அன்பு இந்த திட்டத்தை தெரிந்து கொண்டு நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் இன்று நிரூபிப்பானா என்ற சந்தேகம் நாடகம் பார்க்கும் எல்லோருக்குமே இருக்கிறது.
அதை தவிர்த்து நந்தாவை ஆனந்தி அழகனாக நினைத்து விட்டால் அடுத்த குழப்பம் ஆரம்பித்து விடும். இன்று அன்பு மற்றும் மகேஷ் ஆனந்தியை நேரில் பார்த்து அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என பார்க்கலாம்.