விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் கடந்த ஒரு வாரமாக கல்யாண எபிசோட் தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. அஞ்சலி விஷம் குடித்த நிலையில் அவரை அழைத்துக் கொண்டு அஜய் மருத்துவமனைக்கு சென்று விட்டார்.
ஆனால் அர்ஜுன் உட்பட குடும்பத்தில் உள்ள அனைவரும் வேறு ஒரு பெண்ணுடன் அஜய் மண்டபத்தை விட்டு வெளியேறி விட்டார் என்று நினைக்கிறார்கள். பல்லவியின் அப்பா மகள் திருமணம் நின்றதை நினைத்து வருத்தப்படுகிறார்.
அந்தச் சமயத்தில் அர்ஜுனனின் மனைவி பார்வதி பல்லவிக்கு கண்ணனை திருமணம் செய்து வைக்க கேட்கிறார். சாதாரணமாகவே கண்ணனை பார்த்தால் பல்லவிக்கு சுத்தமாக பிடிக்காது. இப்போது கண்ணன் புருஷன் என்றால் அவ்வளவுதான்.
கண்ணனை திருமணம் செய்து கொள்ளும் பல்லவி
தன்னுடைய வாழ்க்கை நாசமாக காரணம் அஜய் தான் என்ற எண்ணம் பல்லவிக்கு ஏற்படுகிறது. மேலும் எல்லோர் முன்னிலையிலும் குடும்பத்தின் மானத்தை அஜய் குழி தோண்டி புதைத்து விட்டார் என மொத்த குடும்பமும் அவரை வெறுக்கின்றனர்.
அதோடு கண்ணனை வேண்டாய் வெறுப்பாக திருமணம் செய்து கொண்ட பல்லவி அஜய்யை பழிவாங்க பல திட்டங்கள் போட இருக்கிறார். மேலும் பல்லவி இடம் கண்ணன் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்பட இருக்கிறார். அஞ்சலியும் அஜய்யின் மனைவியாக வீட்டுக்குள் வர இருக்கிறார்.
மேலும் இதுவரை கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்த வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில் அடுத்தடுத்த பிரச்சனைகள் அரங்கேற இருக்கிறது. ஆகையால் சுவாரசியமான காட்சிகளுடன் இத்தொடர் வர இருக்கிறது.