சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

Suchitra: மொத்த தனுஷ் கேங்கையும் சாக்கடையில் இறக்கிய சுசித்ரா.. ஆண்ட்ரியா மினி கூப்பர் காரின் ரகசியம்

சுசித்ரா கொடுக்கும் பேட்டியை மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் பார்த்து வருகிறார்கள். அதிலும் அவர் நேற்று கொடுத்த புது பேட்டியில் பூகம்பமே கிளம்பியுள்ளது. ஆண்ட்ரியாவையும், விஷாலையும் தாறுமாறாக பங்கம் பண்ணிவிட்டார்

சுசித்ரா அவரது கணவர் கார்த்திக் குமார். தனுஷ், ஆண்ட்ரியா அனிருத், விஷால், திரிஷா, திவ்யதர்ஷினி இவர்களெல்லாம் ஒரு தனி கேங். இப்பொழுது இவர்கள் மானம் கப்பலேறி வருகிறது. சுசித்ரா ஏற்கனவே 2017இல் சுசி லிக்ஸ் என இவர்களது பிரைவேட் போட்டோக்களை வெளியிட்டு இருந்தார்.

ஆண்ட்ரியா மினி கூப்பர் காரின் ரகசியம்

இப்பொழுது சமீபத்தில் நேற்று கொடுத்த பேட்டியில் ஆண்ட்ரியா மற்றும் விஷால் இருவரையும் சாக்கடையில் இறக்கி விடுவது போல் பேசி உள்ளார். அது மட்டுமின்றி சுசித்ரா, நேரத்திற்கு தகுந்தார் போல் பார்ட்டிகளில் விருந்து பரிமாறுவார்கள் என்று அதிர வைத்துள்ளார். அந்த விருந்துகள் எத்தகையது எனவும் புட்டு புட்டு வைக்கிறார்.

10 மணிக்கு மதுபானங்களும், 12 மணிக்கு மேல் நடிகர்கள் நடிகைகளை அழைத்து வருவார்கள், பார்ட்டி வேறு மாதிரியாக நடக்கும் என்றெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார். எந்தெந்த நடிகர்களுக்கு எப்படிப்பட்ட தொடர்பு இருக்கும் என தெளிவாக விவரிக்கிறார்.

ஆண்ட்ரியா வீட்டு கபோர்ட்டில் 200 வைரம் பதித்த நெக்லஸ்கள் இருக்கிறது என்றெல்லாம் பேசுகிறார். அதுமட்டுமின்றி இந்த பார்ட்டிக்கு வந்தவர்கள் எல்லோரும் ஓவர் நைட்டில் மினி கூப்பர் கார்கள் வாங்கி விடுகிறார்கள். இது எப்படி சாத்தியம் என்றெல்லாம் பல மர்ம முடிச்சுகளை போடுகிறார் சுசித்ரா

Trending News