Chinna Marumagal: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் தற்போது மறு வீடு கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. அதில் மாமியார் வீட்டுக்கு வந்திருக்கும் சேது நல்ல மாப்பிள்ளையாக ஸ்கோர் செய்கிறார்.
மாமியாருக்கு சமையலில் உதவுவது, ஊருக்கே கரண்ட் கொடுப்பது என அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அதை தொடர்ந்து புது ப்ரோமோ ஒன்றும் வெளியாகி உள்ளது.
அதில் சேது சிலம்பாட்டத்தில் தன் திறமையை காட்டி ஜெயிக்கிறார். அதை அடுத்து சமையல் செய்து மாமியார் குடும்பத்திற்கு விருந்தும் வைக்கிறார்.
சேதுவின் விருந்து
அப்போது அங்கு வரும் அவருடைய பாட்டி நீ ஏன் சமைக்கனும் என கேட்கிறார். அதுக்கு சேது என் பொண்டாட்டியை மட்டும் சமைக்க சொல்லி வேலை வாங்குனீங்கல்ல என பாட்டி வாயை அடைக்கிறார்.
அதைத்தொடர்ந்து மீன் குழம்பு, வறுவல் என தலைவாழை இலையில் சாப்பாடு போட்டு மாமியார் வீட்டில் நல்ல மாப்பிள்ளை என்ற சர்டிபிகேட்டை வாங்குகிறார். இதனால் தமிழ் மனதில் காதல் பொங்குகிறது.
இப்படியாக வெளிவந்திருக்கும் இந்த ப்ரோமோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆனாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் போனால் சீரியலில் எப்படி சுவாரசியம் இருக்கும். அதனாலேயே சீக்கிரம் கதைக்கு வந்து ஏதாவது ஒரு பஞ்சாயத்தை ஆரம்பிங்க என்பதுதான் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் ஆக உள்ளது.