சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

Malayalam Movies: 5 மாதங்களில் 1009 கோடி வசூல்.. 2024ஐ ரூல் செய்யும் மலையாளத் திரையுலகம்

Malayalam Movies: 2024 ஆரம்பித்து 5 மாதங்கள் முடிய போகிறது. ஆனால் தமிழில் பெரிய அளவில் வசூல் வேட்டையாடிய படங்கள் எதுவும் இல்லை. ஆனால் மலையாளத்தில் வெளிவந்த அத்தனை படங்களும் வசூலை வாரி குவித்துள்ளது.

அந்த வகையில் ஜனவரி 1ல் ஆரம்பித்து மே 19 வரை வெளியான படங்களின் மொத்த வசூல் 1009.52 கோடியாக இருக்கிறது. அதில் தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்ட மஞ்சுமல் பாய்ஸ் 241 கோடிகளை வசூலித்துள்ளது.

அதை அடுத்து ஆடு ஜீவிதம் 158 கோடிகளையும் ஆவேசம் 155 கோடிகளையும் வசூலித்திருக்கிறது. அடுத்தபடியாக பிரேமலு 135 கோடிகளை தட்டி தூக்கி இருக்கிறது.

இந்த வருடத்தை ரூல் செய்யும் மலையாள சினிமா

மேலும் வருஷங்களுக்கு சேஷம், பிரமயுகம், குருவாயூரம்பல நடையில், ஆபிரகாம் ஓஸ்லர் என பல படங்கள் நல்ல லாபத்தை பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த வருட முதல் பாதியில் மலையாள திரையுலகுக்கு லாபகரமாகவே இருக்கிறது.

அங்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் இந்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இனி வரும் படங்களுக்கும் இதே அளவு மவுசு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் மலையாளத்தில் வரும் படங்கள் கமர்சியல் ஆக இல்லாமல் சிறந்த கதையாக இருக்கிறது. அதேபோல் குறைந்த பட்ஜெட்டில் பார்வையாளர்களை கவரும் படியாகவும் உள்ளது.

மேலும் ஹீரோக்களும் இமேஜ் பார்க்காமல் கேரக்டராகவே இறங்கி நடிக்கின்றனர். இதுதான் மலையாள படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக உள்ளது.

Trending News