Netflix: என்னதான் திரையரங்குகளில் படத்தைப் பார்த்தாலும் தினமும் குடும்பத்துடன் வீட்டில் இருந்தபடியே பார்க்கும் படங்களுக்கு மவுசு அதிகம் தான். அந்த வகையில் சில ஓடிடி நிறுவனங்கள் அதை பூர்த்தி செய்து வருகிறது. முக்கியமாக கோடை விடுமுறையில் மிஸ் பண்ணாமல் பார்த்து ரசிக்கக்கூடிய படங்கள் எக்கச்சக்கமாக இருக்கிறது.
அதில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் திரில்லர் மற்றும் ஹாரர் படங்கள் என்னென்னவென்று இருக்கு என்பதை பார்க்கலாம்.
நெட்ஃப்லிக்ஸ்-ல் வெளியான தொழில்நுட்ப படங்கள்
I am Mother: அம்மாவின் பாசத்துக்கு ஈடாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. ஆனால் இந்த உணர்வுகளை அளிக்கும் மனிதர்களை விட ஒரு ரோபோட்டிக் ஒரு குழந்தையை அம்மாவைப் போல பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் உலகமே அழிந்தாலும் என் மகளை நான் பார்த்துக் கொள்வேன் என்று அந்த ரோபோட்டிக் பாசத்தை கொட்டுகிறது. இவர்களுக்கு இடையில் ஒரு அமானுஷ்ய சக்தி நுழைந்ததால் ரோபோட்டிக் அம்மா சைக்கோவாக மாறும். இது என்ன காரணத்திற்கு என்று அந்த குழந்தை ஆராய்ச்சி பண்ணும் பொழுது ஏற்படக்கூடிய திடுக்கிடும் விஷயங்கள் தான் இப்படத்தின் கதையாக இருக்கிறது.
Extinction: இப்படத்தின் கதையானது மர்மமான முறையில் காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடிக்கும் ஒரு கணவர் ஆபத்தான பயணத்தை எப்படி மேற்கொள்கிறார் என்பதை காட்டப்பட்டிருக்கும். இப்படத்தில் ஒவ்வொரு நொடியும் பதபத வைக்கும் காட்சிகளுடன் திர்லராக அமைந்திருக்கும்.
TAU: ஒரு அறிவியல் ஆராய்ச்சிக்காக ஹீரோயினை கடத்தி அடைத்து வைத்திருப்பார்கள். இங்கிருந்து எப்படியாவது தப்பித்து விடனும் இல்லையென்றால் நம்மை கொன்று விடுபவர்கள் என்று அந்த ஹீரோயின் யோசிக்கிறார். அதற்காக அவரை சுற்றி அமைக்கப்பட்டிருக்கும் தடைகளை எப்படி மீறி வெளியேறுகிறார் என்பதை அறிவியல் டெக்னாலஜியை பயன்படுத்தி படமாக காட்டப்பட்டிருக்கும்.
Archive: புது டெக்னாலஜி பயன்படுத்தி எப்படி எதிர்காலத்தை புதிதாக மாற்றலாம் என்று கண்டுபிடிக்கும் விஷயத்தில் இறங்கும் பொழுது அதில் பல விஷயங்கள் அச்சுறுத்தும் வகையில் காட்டப்பட்டிருக்கும். ஆனால் அதையெல்லாம் மீறி ரொம்பவே ஆர் படம் அளவிற்கு ஒரு புதிய கண்டுபிடிப்பை கண்டுபிடிக்கும் வகையில் படம் திரில்லராக போய்க் கொண்டிருக்கும்.
Ex Machina: இப்பொழுது அதிகமாக யூஸ் பண்ணப்படுகிறது Artificial intelligence(AI) என்று சொல்கிற ஒரு தொழில்நுட்பம்தான். இந்த தொழில்நுட்பத்தால் நல்லது நடக்குமா? அல்லது கெட்டது நடக்க வாய்ப்பு இருக்கிறதா என்று ஒரு ஆராய்ச்சியின் மூலமாக எடுக்கப்பட்ட படம் தான் இப்படத்தின் கதையாக இருக்கும்.
The Irishman: இப்படம் இரண்டாம் உலகப் போரின் மூத்த வீரர் ஆன ஃபிராங்க் ஷீரனின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க கிரைம் மற்றும் திரில்லர் கதையுடன் காட்சிகள் அமைந்திருக்கிறது.
Upgrade: எதுக்கெடுத்தாலும் டெக்னாலஜியை பயன்படுத்தி மனிதனை ஒரு ஓரமாக முடக்கி வரும் அந்த டெக்னாலஜியை வெறுத்து வரும் ஒரு ஹீரோ. அப்படிப்பட்ட இந்த ஹீரோக்கு ஏற்பட்ட விபத்தினால் தலையைத் தவிர மற்ற இடங்களில் அடிப்பட்டு நடப்பினமாக இருக்கிறார். அந்த நேரத்தில் இவருடைய கழுத்தில் ஒரு சிப் பொருத்தப்பட்டிருக்கும். அதன்பின்பு மனிதராக மாறி செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயங்களும் எதிர்பார்க்காத ட்யூஸ்ட்க்கு மேல் ட்விஸ்டாக ஏற்படும் திருப்பங்களை தான் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது.
Inception: கனவுகளை பகிர்ந்து அதன் மூலம் கார்ப்பரேட் ரகசியங்களை திருடும் ஒரு தொழில் முறை டெக்னாலஜியை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதையாக அமைந்திருக்கும். அதற்காக கனவு காணும் நோக்கில் ஒரு மருந்தை பயன்படுத்தி கிட்டத்தட்ட 50 வருடமாக கனவு காணும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இதற்கு இடையில் இவர்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் அந்த கனவு கலைந்து மறுபடியும் பழைய நிலைமைக்கு திரும்புகிறார்கள். இப்படி போய்க்கொண்டிருந்த நிலையில் எப்படி அவர்களுடைய கனவை முடித்து டெக்னாலஜி விஷயத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதால் இப்படத்தின் கதையாக இருக்கிறது.
இப்படி இந்த எட்டு ஹாலிவுட் படங்களுமே புது டெக்னாலஜியை பயன்படுத்தி எந்த அளவிற்கு அவர்களுடைய நடைமுறை வாழ்க்கையை மேற்கொள்கிறார்கள் என்பதை மையப்படுத்தி படமாக்கப்பட்டு இருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு விஷயங்களுமே மிக சுவாரஸ்யமாக பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கும். தற்போது இப்படிப்பட்ட படத்தை பார்ப்பதற்கு நெட்ஃப்லிக்ஸ் தளத்தில் கோடை விடுமுறையை என்ஜாய் பண்ணும் விதமாக செம ட்ரீட்டாக இருக்கிறது.