Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்து மற்றும் மீனாவின் முதல் வருட திருமண பங்க்ஷன் நல்லபடியாக முடிந்தது. இதற்கு முக்கியமான காரணம் சுருதி மற்றும் ரவி தான். ஏனென்றால் இவர்கள் தான் முத்து மீனாவை வெறுக்காத அளவிற்கு ஒரு நடுநிலையாக இருந்து நிகழ்ச்சியை முடித்து இருக்கிறார்கள்.
அப்போது சுருதி ஒவ்வொருவரிடமும் முத்து மற்றும் மீனாவை பற்றி ஒரு ஸ்டோரி மாதிரி கேட்கிறார்கள். அதில் ஒவ்வொருவரும் மனதில் பட்டதை சொல்லும்பொழுது வழக்கம்போல் ரோகிணி மற்றும் மனோஜ் குதர்க்கமாக அவர்களை காயப்படுத்தும் வகையில் கிண்டல் அடித்து பேசி விட்டார்கள்.
மீனா பேச்சைக் கேட்டு அதிர்ந்து போய் நிற்கும் மனோஜ்
ஆனால் விஜயா, பாராட்டுறாங்களா அல்லது திட்றாங்களா என்பதை கணிக்க முடியாத அளவிற்கு நல்ல விஷயமும் சொல்லி ஒன்னு ரெண்டு விஷயங்களை ஏற்ற இறக்கமாகவும் பேசிவிட்டார். பிறகு முத்து மற்றும் மீனா அவர்களுடைய திருமண வாழ்க்கையை பற்றி பகிர்ந்து வருகிறார்கள்.
அப்பொழுது மீனா முத்துவை பற்றி சில விஷயங்களை சொல்லிய நிலையில் எனக்கு இன்னும் புரியாத புதிராக ஏதோ ஒரு உண்மை மறைக்கப்பட்டு இருக்கிறது என்பது போல் தெரிகிறது. அதை பற்றி இவரிடம் கேட்டால் என்னிடம் சொல்லாமல் மறைத்து விடுகிறார். அப்படி என்றால் என்னை இன்னும் முழு மனைவியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றுதான் அர்த்தம்.
அவர் எப்பொழுது என்னை நம்பி சில உண்மைகளை சொல்கிறாரோ அப்பொழுதுதான் அவருடைய முழு மனைவி என்று எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என மீனா சொல்கிறார். அதற்கு முத்து அப்படி என்றால் நீ கடைசி வரை முழு மனைவியாக முடியாது என்று பதில் கொடுக்கிறார்.
ஆனால் இதற்கிடையில் மீனா இதைப் பற்றி பேச ஆரம்பித்த பொழுது மனோஜ் மற்றும் விஜயாவின் முகம் அப்படியே மாறிவிட்டது. அதிலும் மனோஜ் திருட்டு முழி முழித்துக் கொண்டு எங்கே வெளியே சொன்னால் நாம் மாட்டி விடுவோமோ என்ற பயம் அவர் கண்ணில் தென்பட்டது.
அந்த வகையில் மனோஜ் ஏதோ தப்பு தண்டா பண்ணி அந்த பழியை முத்து ஏற்றுக்கொண்டு விஜயாவிடம் மறைத்திருக்கிறார். உண்மை தெரியாத விஜயா முத்துவை வெறுப்பது போல் தோன்றுகிறது. அதனால் இவர்களுக்குள் இருக்கும் ரகசியம் என்னவென்று வெளிவந்தால் தான் விஜயா மற்றும் மனோஜ் ஆடும் ஆட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி மீனா வைப்பார்.
இதனால் இந்த உண்மைகளை கண்டறியும் விதமாக பாட்டியிடம் மீனா உண்மைக்கான ரகசியங்களை கேட்டு தெரிந்தால் இன்னும் இந்த நாடகம் சூடு பிடிக்கும். அத்துடன் ரோகிணியின் கொட்டத்தை அடக்குவதற்கும் வாய்ப்பாக அமையும்.