வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

Seeman: நீ அடங்க மாட்ட உன்ன என்ன பண்றேன் பாரு.. சீமானுக்கு எதிராக விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ

Seeman: அரசியல் வாழ்விற்கு வந்தால் சர்ச்சைகளை சந்தித்து தான் ஆக வேண்டும். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சந்திக்காத பிரச்சினைகளே கிடையாது.

அதில் நடிகை விஜயலட்சுமி அவர்களுக்கு எதிராக கொடுத்த புகாரும், வழக்கும் தான் பேரதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் திடீரென அவர் இதிலிருந்து பின்வாங்குவதாக அறிவித்தார்.

அதனால் இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை விஜயலட்சுமி வெளியிட்டுள்ளார். அதில் அவர், சீமான் எனக்கு பொண்டாட்டி இருக்கு பிள்ளைங்க, மாமியார் இருக்கு என உத்தமன் மாதிரி பேசுறார்.

விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோ

அப்படி இருப்பவர் எதற்காக பொண்டாட்டின்னு என் கூட ஆட்டம் போட்டார். திமுக முன்னாடி மானம் போகுதுன்னு போன வருஷம் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை என் அக்கவுண்டில் மாதம் 50 ஆயிரம் போட்டு இருக்கிறார்.

உனக்கு மட்டும் தான் குடும்பம் இருக்கா? எனக்கெல்லாம் இல்லையா? என கடுமையாக திட்டி தீர்த்துள்ளார். மேலும் நீ அடங்க மாட்ட உன்ன என்ன பண்றேன் பாரு எனவும் கொந்தளித்துள்ளார்.

அத்துடன் கர்நாடகாவில் வழக்கு தொடர போகிறேன். சீமான் என்னுடன் ஆட்டம் போட்ட அத்தனை வீடியோவும் இருக்கு. அதை வைத்து உன் மானத்தை வாங்குகிறேன் என ஆவேசமாக பேசியிருக்கிறார்.

இதன் மூலம் சீமான் விஜயலட்சுமி பிரச்சனை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதற்கு சீமான் தரப்பிலிருந்து எந்த மாதிரியான விளக்கம் வரப்போகிறது என்பதையும் மீடியாக்கள் கவனித்து வருகின்றன.

Trending News