ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

திடீரென குட் பேட் அக்லி போஸ்டர் வெளியாக காரணம்.. விடாமுயற்சியில் அனிருத் செய்த சம்பவம்

துணிவு படத்திற்கு பிறகு அஜித்தின் படங்கள் எதுவும் வெளியாகாதால் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியில் இருந்தனர். ஆனால் இப்போது மீண்டும் ஃபார்முக்கு வந்திருக்கும் அஜித் தன்னுடைய அடுத்தடுத்த பட அப்டேட்டுகளை அள்ளி தெளித்து வருகிறார்.

அந்த வகையில் விடாமுயற்சி படம் வருகின்ற தீபாவளிக்கும், குட் பேட் அக்லி படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அனிருத் ஒரு மாஸ் சம்பவம் செய்திருக்கிறார்.

அதாவது ஏற்கனவே அஜித்துக்கு ஆலுமா டோலுமா என்ற பாடலை கொடுத்து ஹிட் செய்த நிலையில் விடாமுயற்சியிலும் இதே பாணியில் ஒரு பாடல் உருவாகி இருக்கிறது. இந்த பாடல் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என படக்குழு எதிர்பார்க்கின்றனர்.

விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படத்தின் முக்கிய அப்டேட்

மேலும் திடீரென அஜித்தின் குட் பேட் அட்லி படத்தின் அப்டேட் வருவதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பு மே பத்தாம் தேதி தொடங்கலாம் என்று மே மூன்றாம் தேதி தான் முடிவு எடுத்துள்ளனர்.

அதுவும் திடீரென 700 தொழிலாளர்களைக் கொண்டு சரியான நேரத்தில் செட் அமைக்கும் வேலையும் நடந்துள்ளது. அந்த சமயத்தில் தொழிலாளர்கள் அஜித்திடம் செல்பி எடுக்க கேட்டுள்ளனர். அவர்களின் விருப்பத்தை நிராகரிக்க முடியாமல் அஜித் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்த நிலையில் அஜித் மற்றும் படக்குழுவினர் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவு செய்தனர். இதனால் தான் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி திடீரென குட் பேட் அக்லி படத்தின் போஸ்டர் வெளியானது.

Trending News