விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை போலவே சன் டிவியில் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இவ்வுலகில் விஜய் டிவியில் இத்தனை வருடம் பயணித்த வெங்கடேஷ் பட் திடீரென விஜய் டிவிக்கு சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
மேலும் வெங்கடேஷ் பட்டுக்கு எதிராக நிறைய விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் பரவி வந்தது. ஆனாலும் இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ் ஆகியவற்றின் மூலம் பதிலளித்த வெங்கடேஷ் பட் முதல் முறையாக பேட்டியில் இது குறித்து பேசி இருக்கிறார்.
அதாவது வெங்கடேஷ் பட் சமையல் சமையல் நிகழ்ச்சி தொடங்கி பல நிகழ்ச்சிகளை மீடியா மிஷன் நடத்தி வந்துள்ளது. ஏனென்றால் என்னை இவ்வளவு நாள் வளர்த்து விட்டவர்கள் அவர்கள்தான். அவர்கள் எந்த சேனலுக்கு கூப்பிட்டாலும் நான் அங்கு சென்று விடுவேன் என்று வெங்கடேஷ் பட் கூறியிருக்கிறார்.
விஜய் டிவிக்கு கூப்பிடாதீங்க என்று கூறிய வெங்கடேஷ் பட்
மேலும் விஜய் டிவி மற்றும் மீடியா மிஷன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சன் டிவிக்கு சென்று விட்டனர். விஜய் டிவியிலிருந்து பாலா போன்ற தன்னிடம் பேச வேண்டும் என்று கூறினார்கள். கண்டிப்பாக பேசலாம், சேர்ந்து காபி குடிக்கலாம், ஆனால் மீண்டும் என்னை விஜய் டிவிக்கு கூப்பிடாதீர்கள் என்று கூறிவிட்டேன்.
ஏனென்றால் எனக்கு மீடியாவை விட நன்றி கடன் மிக முக்கியம். இவ்வளவு வருடமாக எந்த நிகழ்ச்சி, என்ன ஆடை, என்ன நேரம் என் எல்லாமே அந்நிறுவனம் தான் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் எங்கு கூப்பிட்டாலும் நான் கண்டிப்பாக செல்ல வேண்டும்.
மேலும் விஜய் டிவியுடன் 24 வருடமாக பயணித்து இருக்கிறேன். எனக்கும் விஜய் டிவிக்கும் எந்த மனஸ்தாபமும் தற்போது வரை இல்லை. நன்றி கடனுக்காகத்தான் சன் டிவிக்கு சென்றேன் என ஒரே போடாக வெங்கடேஷ் பட் கூறியிருக்கிறார்.