திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

இந்த 4 ஹீரோக்கள் மறக்க முடியாத ஹிட் கொடுத்த பி.வாசு..

பி வாசு, கேஎஸ் ரவிக்குமார் 80-90 காலகட்டங்களில் கொடி கட்டி பறந்த இயக்குனர்கள். அந்த காலகட்டத்தில் இவர்களது படத்தில் நடித்துவிட மாட்டோமா என பல பெரிய ஹீரோக்கள் காத்துக் கிடந்தனர். கமலைத் தவிர மற்ற எல்லா ஹீரோக்களுக்கும் பி வாசு மறக்க முடியாத லைப் டைம் ஹிட் படங்கள் கொடுத்துள்ளார். அப்படி நான்கு ஹீரோக்கள் கொடுத்த சூப்பர் ஹிட் மூவி.

சின்னதம்பி: பிரபு மற்றும் குஷ்பூ நடிப்பில் உருவான இந்த படம் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா சாதனை படைத்தது. இந்த படத்தில் வெகுளியாக பிரபு நடித்ததை இன்று வரை மக்கள் கொண்டாடி வருகின்றனர். பிரபுவிற்கு சின்ன தம்பி என்ற ஒரு பெயரே வந்துவிட்டது. மேலும் பிரபுவை வைத்து பி.வாசு இயக்கிய படங்கள்.

நீதியின் நிழல்
என் தங்கச்சி படிச்சவ
பிள்ளைக்காக
சின்ன தம்பி
கிழக்கு கரை
செந்தமிழ்ப்பாட்டு
கட்டுமரக்காரன்
Mr. மெட்ராஸ்
சுயம்வரம்
வண்ணத்தமிழ்ப்பாட்டு
சந்திரமுகி

வால்டர் வெற்றிவேல்: ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் மிரட்டலாக இந்த படத்தில் நடித்திருப்பார் சத்தியராஜ். மற்றவர்கள் தனது பெயரை கேட்கும் போது சத்யராஜ், வெற்றிவேல், வால்டர் வெற்றிவேல் என்று சொன்ன பிறகுதான் தமிழ் சினிமாவில் இந்த ட்ரெண்ட் உருவானது. மேலும் சத்யராஜை வைத்து பி.வாசு இயக்கிய படங்கள்.

வாத்தியார் வீட்டு பிள்ளை
வேலைக்கிடைச்சிருச்சி
நடிகன்
ரிக்சாமாமா
வால்டர்வெற்றிவேல்
உடன்பிறப்பு
மலபார் போலீஸ்
பொண்ணு வீட்டுக்காரன்
அசத்தல்

சேதுபதி ஐபிஎஸ்: பலபடங்களில் போலீஸ் அதிகாரியாக விஜய்காந்த் நடித்திருந்தாலும் “சேதுபதி ஐபிஎஸ்” ஒரு தனி ரகம். மீனா மற்றும் கேப்டன் இணைந்து நடித்த இந்த படம் 100 நாட்கள் ஓடியது. குறிப்பாக மீனா கிளைமாக்ஸ் காட்சியில் ஆடிய நடனமும் அந்த பாடல் காட்சியும் இன்று வரை மறக்க முடியாத ஒன்று. விஜயகாந்தை வைத்து பி.வாசு இயக்கிய படங்கள்.

பொன்மனச்செல்வன்
சேதுபதி ips

சந்திரமுகி: பாபா படத்தில் நடித்ததன் மூலம் படுதோல்வி சந்தித்தார் ரஜினிகாந்த். அந்த படத்தை வாங்கி விநியோகம் செய்தவர்களுக்கு நிறைய நஷ்டம். அந்த கடனை எல்லாம் சந்திரமுகி படம் கொடுத்த வசூல் மூலம் தான் ரஜினி அடைத்தார். ரஜினி கேரியரை மீண்டும் தூக்கி நிறுத்தியது சந்திரமுகி படம் தான். ரஜினிகாந்தை வைத்து பி.வாசு இயக்கிய படங்கள்.

பணக்காரன்
மன்னன்
உழைப்பாளி
சந்திரமுகி
குசேலன்

Trending News