எப்படி ரீ-ரிலீஸ் செய்து காசு பார்க்கலாம் என நினைக்கும் நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையில் தியேட்டரை விட்டு ஓட வைத்த ஹீரோக்கள் ஏராளம். அதிலும் சில முக்கியமான கதாபாத்திரங்களை மறைக்கவே முடியாது அப்படிப்பட்ட படங்களின் வரிசைகளை தற்போது பார்க்கலாம்.
புலி வேஷம்: எல்லாம் அவன் செயல் படம் மூலம் நன்கு அறியப்பட்டவர் ஆர் கே என்ற ராதாகிருஷ்ணன். இந்த படம் இவருக்கு நன்றாக ஓடியது. அதனை வைத்து இவர் நடித்த புலி வேஷம் என்ற படத்தை பார்க்க சென்றவர்களுக்கு புலி பிராண்டியது போல் இருந்தது. ஒரு காட்சிக்கு தியேட்டரில் இரண்டு பேர் மட்டுமே வந்திருந்தனர். காட்சி கேன்சல் செய்யப்பட்டது.
தேவ்: பருத்திவீரன் கார்த்தியால் இன்று வரைஅந்த படத்தின் தயாரிப்பாளர் பெரும் நஷ்டத்தில் இருந்து மீளவில்லை. இயக்குனர் அனுராக் காசிப் இடம் பணியாற்றிய அசிஸ்டன்ட் ரவிசங்கர் இந்த படத்தை இயக்கினார். இது பையா படம் போல் இருக்கும் என நம்பி ஏமாந்து பாதியில் ஓடி வந்த ரசிகர்கள் ஏராளம்.
மொத்த பெருமையையும் தோளில் சுமந்த பிரேம், மனோஜ்
அல்லி அர்ஜுனா: காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் சரண். இவரை நம்பித்தான் இந்த படத்தை பார்க்க பல பேர் சென்றனர். ஆனால் ஏன் வந்தோம் என பாதியில் விரட்டிய பெருமை நடிகர் மனோஜ் மற்றும் இயக்குனர் சரணையும் சேரும் .
வாரார் சண்டியர்: இதில் நடித்த ஹீரோவை பல பேருக்கு தெரியும். இவர் படங்கள் எப்பொழுதுமே ஹாலிவுட் தோரணையில் தான் இருக்கும். நடிகர் பிரேம் குரோதம் என்ற படம் மூலம் நன்கு அறியப்பட்ட ஒரு ஹீரோ. இவர் மற்றும் குஷ்பூ இணைந்து நடித்த படம் வாரார் சண்டியர். இந்த படத்தைப் பார்த்த பாதி பேர் இடைவேளைக்கு முன்னே ஓடி விட்டனர்.
இதய திருடன்: ஜெயம் ரவி எதற்கு இப்பேற்பட்ட ஒரு படத்தில் நடித்தார் என்பது இன்றுவரை பல பேருக்கு புரியாத புதிராய் இருக்கிறது. இந்த படம் தயாரிப்பாளருக்கு ஒரு பெரும் நஷ்டத்தை கொடுத்தது. இந்த படமும் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரணின் படம் தான்.
கதையில் வித்தியாசம் காட்டி வசூலை அள்ளும் ஹீரோக்கள்
- ஓடிடி விற்பனையில் கொள்ள லாபம் பார்த்த 5 படங்கள்
- ரீ ரிலீஸில் மாஸ் காட்டிய 5 படங்கள்
- ரீ ரிலீஸ் இல் வசூலை அள்ளி குவித்த 5 படங்கள்