சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

ஜிவி பிரகாஷுக்கே சீனியர் நாங்க.. தனுஷின் நாரதர் வேலையால் விவாகரத்தான 4 பிரபலங்கள்

Dhanush: இப்போதெல்லாம் திரை பிரபலங்களின் விவாகரத்து செய்தியை அடிக்கடி கேட்க முடிகிறது. அதிலும் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் சைந்தவியின் பிரிவு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்த இவர்கள் ஆசை ஆசையாய் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் 10 வருடத்திலேயே இவர்களுடைய திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.

இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தனுஷ் பெயரும் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. எப்படி என்றால் தனுஷின் நட்பு வட்டாரத்தில் இருந்த அனைவரும் இப்போது விவாகரத்து ஆகிவிட்டார்கள்.

தனுஷால் நடந்த விவாகரத்து

அந்த ராசி தான் ஜிவி பிரகாஷ் விசயத்திலும் நடந்திருக்கிறது என்ற பேச்சும் ஒரு பக்கம் எழுந்துள்ளது. அதன்படி அமலா பால், தனுஷ் உடன் இணைந்து நடித்தது மட்டுமல்லாமல் அவருடைய தயாரிப்பிலும் நடித்துள்ளார்.

இந்த நெருக்கமான நட்பு தான் விவாகரத்துக்கு காரணமாக சொல்லப்பட்டது. அடுத்ததாக தொகுப்பாளினி திவ்யதர்ஷினியின் திருமணம் முறிவும் அதிர்வை ஏற்படுத்தியது.

இவர் தனுஷ் இயக்கி நடித்திருந்த பா பாண்டி படத்தில் சிறு ரோலில் நடித்திருந்தார். அந்த சமயத்தில் தான் இவருடைய விவாகரத்து நடந்தது. அடுத்ததாக தனுஷின் உடன்பிறந்த அண்ணன் செல்வராகவன், சோனியா அகர்வாலை விவாகரத்து செய்தார்.

சுச்சி லீக்ஸ்

அதேபோல் அவருடைய நெருங்கிய நண்பர் கார்த்திக் குமார் பாடகி சுசித்ராவை விவாகரத்து செய்தார். இது சுச்சி லீக்ஸ் விவகாரத்தால் நடந்தது என ஊருக்கே தெரியும்.

இதன் முழு காரணகர்த்தாவே தனுஷ் தான் என்பதை சுசித்ராவே வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இப்படி பலரின் விவாகரத்துக்கு காரணமாக சொல்லப்படும் தனுஷும் தற்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு சென்றுள்ளார்.

இதை கலாய்த்து வரும் நெட்டிசன்கள் அவரை ஒரு குட்டி நாரதர் என்று கூறுகின்றனர். ஆனால் இவரை மட்டும் குறை சொல்லி என்ன பிரயோஜனம். அந்த பிரபலங்கள் மீதும் தவறு இருக்கிறது எனவும் கமெண்டுகள் பறக்கின்றது.

சுச்சி அம்பலப்படுத்திய தனுஷின் லீலைகள்

Trending News