YouTuber Irfan: கோழி ஒரு முட்டையிட ஊரெல்லாம் கொக்கரிக்கும்னு சொல்வாங்க. அப்படித்தான் இப்போ இர்ஃபான் பண்ண வேலையும் இருக்கு. கடந்த இரண்டு தினங்களாக எந்த பக்கம் போனாலும் இவரைப் பற்றி தான் பேச்சு.
அட அவர் குழந்தை, அவர் என்ன வேணா பண்ணிட்டு போறாரு, உங்களுக்கு என்னப்பா கண்டன்டு கிடைக்கலைன்னு இப்படி அவர பத்தி பேசிட்டு இருக்கீங்கன்னு சிலருக்கு தோணலாம். இர்பான் வீடியோ போட்ட விஷயம் இந்த அளவுக்கு பூதாகரமாக வெடிப்பதற்கு முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு.
1994 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஒரு குழந்தை பிறப்பதற்கு முன் அது எந்த பாலினம் என அறிவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகிவிட்டது.
மதுரை மற்றும் தேனி பக்கங்களில் பெண் சிசுக்கொலை நடந்ததுதான் இதற்கு காரணம். அது மட்டும் இல்லாமல் பிறந்த குழந்தையை உங்களால் வளர்க்க முடியவில்லை என்றால் எங்களிடம் கொடுத்து விடுங்கள் என்று அரசு திட்டம் தான் தொட்டில் குழந்தை.
குழந்தைகள் கொலையை தடுப்பதற்காக தமிழக அரசு இதையெல்லாம் செய்தது. சரி, இர்ஃபான் துபாய் நாட்டுக்கு போய் தானே ஸ்கேன் பண்ணி பார்த்தாரு, இதுல என்ன தப்பு இருக்கு என கேட்கலாம்.
என்ன குழந்தை பிறக்க போவது என்று அவர் தெரிந்து கொள்வதில் தப்பே இல்லை. ஆனால் அதை வீடியோவாக போட்டது தான் தப்பு. வீடியோ போட்ட நாட்களில் இரண்டு மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்து விட்டார்கள். இதில் பணக்காரர்களும் இருப்பார்கள்.
இவர் செய்ததைப் போலவே நாமும் வெளிநாட்டிற்கு சென்று குழந்தை பிறக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று அவர்களுக்கு தோணலாம். அதில் எத்தனை பேர் பெண் குழந்தை என்று தெரிந்தால் கலைக்காமல் இருப்பார்கள் என்பது தெரியாது.
இர்ஃபான் இது போன்ற கலாச்சாரத்தை நீக்கி வைக்கிறார் என்று தான் அவர் மீது பட்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவாரா என்று கூட சிலருக்கு சந்தேகம் இருக்கலாம்.
கொலை கேஸிலிருந்தே தப்பிச்சாச்சு, இதெல்லாம் தூசி
இர்பான் சிறை தண்டனை பெறுவார் என்பதெல்லாம் கனவில் கூட நடக்காது. கடந்த சில வருடங்களுக்கு முன்பாக இவருடைய சொகுசு கார் 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை இடித்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அந்தக் காரை இர்ஃபான் ஓட்டவே இல்லை என சட்டரீதியாக நிரூபிக்கப்பட்டது. விபத்து நடந்த பகுதியில் இருந்த மக்களின் குரல் அப்படியே நசுக்கப்பட்டது.
எல்லா சாலை விபத்திலும் பறிமுதல் செய்யப்பட்ட கார் காவல் நிலையத்திலேயே பல வருடங்களுக்கு கிடக்கும். ஆனால் இவருடைய கார் மட்டும் சில மணி நேரங்களிலேயே பளபளப்பாக வீடு வந்து சேர்ந்தது.இதிலிருந்தே தெரியவில்லையா இர்ஃபானை எந்த சட்டமும் எதுவும் செய்து விடாது என்று. கொலை வழக்கிற்கு கலங்காத அவர் எப்படி இந்த வழக்குக்கெல்லாம் பயந்து விடப் போகிறார். பலதரப்பட்ட உணவுகளை விமர்சனம் செய்யும் விமர்சகராக மீடியாவிற்குள் வந்தார் இர்ஃபான்.
அதன் பின்னர் பலவகையான உணவுகளை சமைத்து பிரபலங்களுக்கு கொடுத்து அவர்களை பேட்டி எடுத்து இன்னும் பிரபலமானார். இப்போது பல அரசியல் புள்ளிகளுக்கு நெருக்கமான நபர் இவர். ஒரு உயிர் போனதற்கு இவர் மீது எந்த ஆக்சனும் எடுக்கப்படவில்லை என்னும்போது, இந்த வீடியோ வெல்லாம் அவருக்கு தூசு மாதிரி.
இதுவரை இர்ஃபான் செய்த சம்பவங்கள்
- இர்ஃபான்க்கு பறந்த நோட்டீஸ், ஆர்வக்கோளாறால் செய்த வேலை
- யூப்யூடிப் இர்ஃபான் திருமண கண் திருஷ்டியால் வந்த உயிர் பலி
- கொரோனா காலகட்டத்தில் போட்ட பிரியாணி வீடியோக்கு எதிர்ப்பு
- மதத்தினால் எழுந்த சர்ச்சைக்கு கொடுத்த பதிலடி