Serial TRP update: குடும்பத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு ஒரே பொழுதுபோக்கு வீட்டில் இருந்தபடியே சீரியல்களை பார்ப்பது தான். அதனால் ஒவ்வொரு சேனல்களும் புதுப்புது சீரியல்களை வைத்து அவர்களுடைய டிஆர்பி ரேட்டிங்கை அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் எப்பொழுதுமே சன் டிவி சீரியல் தான் மிக உயரத்தில் இருக்கும். ஆனால் தற்போது இதை முந்தி விஜய் டிவி சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறது. அந்த சீரியல்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
சிங்க பெண்ணே
கயல்
சிறகடிக்கும் ஆசை
வானத்தைப்போல
பாக்கியலட்சுமி
எதிர்நீச்சல்
சிங்க பெண்ணே: இந்த சீரியல் ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே மக்களின் பேவரைட் நாடகமாக இடம் பிடித்தது. அதனால் இப்பொழுது வரை டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது. தற்போது 9.10 புள்ளிகளைப் பெற்றிருக்கிறது. நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் நந்தா பொய் சொல்லி கல்யாணம் பண்ண முடிவு எடுத்திருக்கிறார். இதற்குள் அன்புக்கு யாரோ இதில் ஆனந்தியை திசை திருப்புகிறார்கள் என்று புரிந்து விட்டது. அதனால் கூடிய விரைவில் நந்தாவின் ஆட்டத்திற்கு அன்பு முற்றுப்புள்ளி வைத்து விடுவார்.
கயல்: கயல் சீரியலும் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் 9.09 புள்ளிகளை பெற்றிருக்கிறது. ஆனால் கயலுக்கு மட்டும் புதுசு புதுசாக பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் புதிதாக வந்திருக்கும் அத்தை மூலம் கயல் குடும்பத்திற்கு சிக்கல்கள் வரப்போகிறது. இனி இதை சமாளிக்கவே கயல் ஓடிக் கொண்டு வருவார். அதனால் இப்போதைக்கு கயல் மற்றும் எழிலுக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லை.
சிறகடிக்கும் ஆசை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்களில் இந்த ஒரு சீரியல் தான் தொடர்ந்து டாப் 6 குள் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் 8.14 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறது. ரோகிணி எப்பொழுது மாட்டுவார் என்று காத்திருக்கும் நேரத்தில் தொடர்ந்து பொய் பித்தலாட்டம் பண்ணி ஜெயித்துக் கொண்டே வருகிறார். இதை எல்லாம் கண்டுபிடிக்கும் விதமாக முத்துவின் கதாபாத்திரம் அமைந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
வானத்தைப்போல: சில சீரியல்கள் என்ன ஆனாலும் பார்க்க தவறமாட்டோம் என்று சொல்வதற்கு ஏற்ப இந்த சீரியல் மக்களிடத்தில் ஒட்டிக்கொண்டது. அதனால் தான் 7.64 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது. சின்ராசு ஒரு பக்கம் துளசியை தேடிக்கொண்டு அடைகிறார். ஆனால் துளசி, அண்ணன் கண்ணில் படாமல் புகுந்த வீட்டோடு சேர்ந்து கஷ்டப்பட்டு கொண்டு வருகிறார்.
பாக்கியலட்சுமி: விஜய் டிவியில் வரும் நாடகத்தில் இந்த நாடகம் டாப்பில் இரண்டாவது நாடகமாக இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில் 7.45 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதற்கு காரணம் கோபி ராதிகாவிடமும் அம்மாவிடமும் மாட்டிக் கொண்டு முழித்து வருவதால் கொஞ்சம் சுவாரஸ்யமாக போய்க்கொண்டிருக்கிறது.
எதிர்நீச்சல்: இது என்னடா எதிர்நீச்சலுக்கு வந்த சோதனை என்று சொல்வதற்கு ஏற்ப ஒரு வருடமாக ஒய்யாரத்தில் ஜொலித்த இந்த நாடகம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குப் போய்க் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் பெருத்த அடியாக 7.28 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. இப்படியே போனால் இந்த நாடகம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.
சமீபத்திய சீரியல்களின் கதை
- விஜய் டிவியில் 5 சீரியலில் நடிக்கும் டோரா புஜ்ஜி.. சிறகடிக்கும் ஆசை மூலம் பிரபலமான ஜீவா
- Sirakadikkum Asai: மீனாவையும் சுருதியையும் பிரிக்க ஸ்கெட்ச் போடும் ரோகினி.. பாட்டியாக போகும் விஜயா
- Ethirneechal: ஜீவானந்தம் ஈஸ்வரிக்கும் முடிச்சு போட நினைக்கும் குணசேகரனின் வாரிசு.. சொத்தை மீட்டெடுக்க ஐடியா கொடுத்த தர்ஷினி