Shocking report for Google Chrome users to watch out for: தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதில் மனிதர்களாகிய நாம், அதில் உள்ள ஆபத்தை அறியாமல், அதனால் ஏற்படும் பலனை மட்டுமே நம்பி முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
இணைய உலவியில் ஃபயர் பாக்ஸ் மற்றும் கூகுள் குரோம் அதிக ஆளுமை தன்மை உடையதாக விளங்கி வருகிறது. ஃபயர் பாக்ஸ் என்பதை கூகுள் குரோம் அறிமுகமாகும் சில வருடங்களுக்கு முன்பே, உபயோகப்படுத்த துவங்கிவிட்டாலும் தற்போது உலகத்தில் அதிக பயனாளர்கள் உபயோகிப்பது என்னவோ கூகுள் குரோம் தான்!
இந்தியாவில் அதிக பயனாளர்கள் உபயோகிக்கும் Default Brower ஆக கூகுள் குரோம் விளங்கி வருகிறது. CERT-In அதாவது Indian Computer Emergency Response Team, கூகுள் குரோம் பற்றிய சில அதிர்ச்சி தரத்தக்க தகவல்களை வெளியிட்டு உள்ளது
அதாவது கூகுள் குரோம் பயனாளர்களுக்கும் அதன் அப்ளிகேஷனை பயன்படுத்துபவர்களுக்கும் ஒரு எச்சரிக்கையான தகவலை வெளியிட்டு உள்ளது.
கூகுள் குரோம்மை Default Brower ஆக உபயோகிப்பவர்களின், தரவுகளை ஹேக்கர்ஸ் எளிதாக கையாளும் வாய்ப்பு இருப்பதாகவும், அதுமட்டுமின்றி Arbitrary code எனப்படும் கோடிங்கை run செய்து, அட்டாக்கர்ஸ் உங்களது சிஸ்டத்தை ஹக் செய்யும் வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளனர்.
நான்கில் ஒரு பங்கு இந்தியர் இந்த விதமான ஹேக்கிங்கால் பாதிப்படைவதாக அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளனர்
இதிலிருந்து உங்களது சிஸ்டத்தை தற்காத்துக் கொள்ள Antivirus சாப்ட்வேர் உபயோகப்படுத்தவும், லேட்டஸ்ட் வெர்ஷன் கூகுள் குரோம் ஐ அப்டேட் செய்யவும் அறிவுறுத்தி உள்ளனர்.
அதுமட்டுமின்றி கூகுள் குரோம் இன் ஆட்டோமேட்டிக் அப்டேட்டை ஆன் செய்யவும் கூறியுள்ளனர் மேலும் தேவையில்லாமல் வரும் லிங்க்கை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அடிக்கடி பயனாளர்கள் செக்யூரிட்டி அப்டேட்ஸ் செய்து தங்களது சிஸ்டத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது இந்த டீம்.
இந்த டிஜிட்டல் உலகத்தில் எங்கிருந்து எப்போது ஆபத்து வரும் என்று அறியாத வேளையில் முடிந்த அளவு, அதே தொழில்நுட்பத்தின் உதவியுடன் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லதே!
கூகுள் செயலி தொடர்புடைய செய்திகள்
- கூகுள் பே செயலி முடக்கம்..
- டிஜிட்டல் பிரச்சாரத்திற்காக கூகுள் வெளியிட்ட அதிர்ச்சி ரிப்போர்ட்
- கூகுள் சாம்ராஜ்யத்தை ஒழிக்க வந்த ChatGPT-யின் ஆட்டம் முடிந்தது
- திரும்புற இடமெல்லாம் AI தொழில்நுட்பம்..