Veetukku Veedu Vaasapadi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் அஜய், காதலித்த அஞ்சலியை காப்பாற்றும் முயற்சியில் கல்யாண மண்டபத்தை விட்டு போய்விட்டார். இதனால் மணப்பெண்ணாக ஏமாற்றத்துடன் இருந்த பல்லவிக்கு வேறு வழி இல்லாமல் கண்ணன் உடன் கல்யாணம் ஆகிவிட்டது.
ஆனால் இந்த கண்ணனை கண்டால் சுத்தமாக பல்லவிக்கு பிடிக்காது. இருந்தாலும் விஸ்வநாதன் வீட்டிற்கு போக வேண்டும் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சம்மதம் தெரிவித்து மருமகளாக நுழைந்து விட்டார். பிறகு அஜய் மற்றும் அர்ஜுன் அம்மா வேற ஒருத்தங்க கண்ணன் மற்றும் பிரியாவுக்கு தான் இவர்கள் அம்மா என்ற விஷயம் பல்லவிக்கு தெரிந்து விட்டது.
டாம் அண்டு ஜெர்ரி சண்டை போட போகும் பல்லவி கண்ணன்
இதனால் இந்த ஒரு விஷயத்தை வைத்து இந்த குடும்பத்தை பிரித்து விடலாம் என்று பிளான் பண்ணி விட்டார். இதனை தொடர்ந்து கண்ணன் மற்றும் பல்லவிக்கு நடக்கும் சம்பிரதாயங்கள் அனைத்தும் குடும்பத்துடன் சேர்ந்து பண்ணுகிறார்கள். இதில் பல்லவிக்கு விருப்பமில்லை என்றாலும் மற்றவர்கள் கண்ணுக்கு நாம் நல்லவிதமாக தெரிய வேண்டும் என்று சகித்துக் கொண்டு பல்லவி அனைத்தையும் பண்ணி வருகிறார்.
இந்த நிலையில் அஜய் வீட்டிற்கு வருகிறார், வந்ததும் விஸ்வநாதன் கோபப்பட்டு அஜய்யை கழுத்த பிடித்து வெளியே தள்ளுகிறார். அப்பொழுது பார்வதி கையில் போட்டிருந்த வளையலை கழட்டி கொடுத்து இப்போதைக்கு உன் செலவுக்கு வைத்துக் கொள். ஏதாவது உன்னுடைய பிரண்ட்ஸ் கூட தங்கிக் கொள். கூடிய சீக்கிரமே நான் இங்கு இருப்பவர்களை சமாதானப்படுத்தி உன்னை கூப்பிடுகிறேன் என்று அனுப்பி வைக்கிறார்.
இதே மாடியிலிருந்து பார்த்த பல்லவி இப்பவும் உன் பாச ட்ராமாவை அஜய் இடம் காட்டுகிறாயா? இதற்கெல்லாம் கூடிய விரைவில் வேட்டு வைக்கிறேன் என்று வில்லி ரேஞ்சுக்கு பிளான் பண்ணி விட்டார். அடுத்ததாக பல்லவிக்கும் கண்ணனுக்கும் இரவு நடக்கும் சம்பிரதாயங்களுக்கு அனைவரும் ரெடி பண்ணி விட்டார்கள்.
ஆனால் உள்ளே போன பல்லவி, எதிர்பார்க்காத விதமாக கண்ணன் உனக்கும் எனக்கும் கொஞ்சம் கூட செட் ஆகாது. எனக்கு உன்னை பார்த்தாலே பிடிக்காது என்று பல்லவி சொல்ல நினைத்த டயலாக் அனைத்தையும் கண்ணன் சொல்லி பல்லவி மூஞ்சியில் கரியை பூசி விட்டார். ஆனாலும் இவர்களுடைய செல்ல சண்டை பார்ப்பதற்கு கொஞ்சம் நன்றாகத் தான் இருக்கிறது.
அந்த வகையில் ஒரு பக்கம் பல்லவி நெகட்டிவ் கேரக்டரில் அனைவரையும் பழிவாங்கினாலும், இன்னொரு பக்கம் கண்ணனுடன் சேர்ந்து டாம் அண்ட் ஜெர்ரி சண்டை போடப்போவது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது.
வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Veetuku veedu vasapadi: அஜய்யை வெறுக்கும் குடும்பம், பழிவாங்கத் துடிக்கும் பல்லவி
- Veetuku Veedu Vasaapadi : கண்ணனின் வாழ்க்கையை நாசமாக்கிய அண்ணி
- அஜய் எடுக்கும் முடிவு என்ன.?