வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024

வாங்குறது 30 லட்சம் கொடுக்கிறது 6 லட்சம்.. ஏழை மக்களை குறிவைத்து கிட்னி பறிக்கும் கும்பல், மக்களே உஷாரு

Tamilnadu: மருத்துவம் முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் அனைத்துமே சாத்தியம் தான். மூளை, இதயம் மாற்று சிகிச்சை எல்லாமே மருத்துவத்தால் முடியும். அவ்வளவு ஏன் தலைமாற்றும் சிகிச்சை பற்றிய ஆய்வுக் கூட நடந்து வருகிறது.

இந்த சூழலில் ஏழை மக்கள் தங்களுடைய கடன் பிரச்சனைகளுக்காக கிட்னியை தானம் செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகிறது. ரத்த சொந்தங்களுக்கு பிரச்சினை என்றால் சட்ட ரீதியாக கிட்னி தானம் செய்ய முடியும்.

அதேபோல் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளும் தானம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் போலியாக ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு ஒருவரிடம் இருந்து கிட்னியை வாங்குவதற்கு பல ஏஜெண்டுகள் இருக்கின்றனர்.

ஏழை மக்களை குறிவைக்கும் கும்பல்

அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகை பேசப்படும். கந்துவட்டி கடன் பிரச்சினையில் சிக்கி மீள முடியாதவர்கள் இந்த வழியை தேர்ந்தெடுக்கின்றனர். அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த கும்பல் கிட்னியை பெறுபவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 30 லட்சம் வரை வாங்குகின்றனர்.

ஆனால் கிட்னி கொடுத்தவருக்கோ வெறும் 5 அல்லது 6 லட்சத்தை கொடுத்து விட்டு மீதியை சுருட்டி விடுகின்றனர். இதை தமிழகத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற ஒரு பெண்ணும், இளைஞனும் வாக்குமூலமாக கொடுத்துள்ளனர்.

அங்கு பிரபலமாக இருக்கும் லேக் ஷோர் மருத்துவமனையை மையமாக வைத்து தான் இந்த ஏஜெண்டுகள் செயல்படுகின்றனர். இதற்கான போலி ஆவணங்கள் தயாரித்து அதே மருத்துவமனையில் கிட்னி எடுக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலும் வெளிவந்துள்ளது.

கிட்னி விற்பனை செய்ய வந்தவர்களின் இந்த வாக்குமூலம் தற்போது கடும் இப்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து இதை சட்டரீதியாக கவனிக்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளது.

சமீபத்திய வைரல் செய்திகள்

- Advertisement -spot_img

Trending News