Vijay: விஜய்க்கும் அவருடைய அப்பாவுக்கும் சில வருடங்களாக மன வருத்தம் இருந்தது. இது மீடியாவில் விமர்சனமான நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர் தன் அம்மா அப்பாவை சந்தித்த போட்டோ வெளியானது.
இதனால் அவர்கள் தற்போது பிரச்சினையை மறந்து சுமூகமாகி விட்டதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் மற்றும் ஷோபா இருவரும் காஞ்சி காமாட்சி அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.
அதற்கு முன்பாக சங்கர மடத்தில் விஜயேந்திர ஸ்வாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். அதை அடுத்து காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு வெளியே வந்தனர். அப்போது செய்தியாளர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு பல கேள்விகளை கேட்டனர்.
ஆனால் ஷோபா செய்தியாளர்கள் சுற்றி சுற்றி வருவதை பார்த்து டென்ஷன் ஆகி வராதீங்க என அதிகபட்ச கோபத்தில் சத்தமிட்டார். மேலும் கோவிலை விட்டு செல்லும் வரையிலும் அவர் செய்தியாளர்களை பார்த்து கோபமாகவே பேசிக் கொண்டிருந்தார்.
அதை தொடர்ந்து நிருபர்கள் எஸ் ஏ சந்திரசேகரிடம் விஜய்யின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் என்னுடைய வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும் என் பிள்ளைக்கு எப்போதும் இருக்கும் என்றார்.
டென்ஷனான ஷோபா சந்திரசேகர்
மேலும் விஜய்யின் அரசியலில் உங்களுடைய ஈடுபாடு இருக்குமா என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் நிச்சயமாக இருக்கும் என கூறினார். அதை அடுத்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்காமல் கோவிலுக்கு வந்த இடத்தில் ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என கிளம்பிவிட்டார்.
இதில் கவனிக்கப்பட்ட ஒரு விஷயம் இவர்களுடன் பாஜக பிரமுகர் கணேஷ் வந்திருந்தது தான். இவர் மத்திய அமைச்சர் எல் முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொல்கின்றனர்.
விஜய் தற்போது கட்சி ஆரம்பித்து முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார். இதில் அவருடைய பெற்றோர்கள் பாஜக பிரமுகருடன் நட்பில் இருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஆடு உறவு குட்டி பகை எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.