செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஆபத்தை விலை கொடுத்து வாங்கும் விஜய்.. தளபதிக்கு பின்னால் சீமான் அண்ணன் தோண்டும் குழி

Semaan Betrayed: தமிழகத்தில் கிட்டத்தட்ட ஆறு தேர்தல்களை சந்தித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். பெரிதாய் வெற்றி கிடைக்காவிட்டாலும் வாக்கு சதவீதம் ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்னேறி வருகிறது. 2026 தேர்தலிலும் தனித்து நின்றால், இவருக்கு இதே நிலைமை தான். அதனால் இப்பொழுது தந்திரமாக செயல்பட்டு வருகிறார்.

இனியும் சீமான் தன்னுடைய கொள்கையோடு ஒத்து வருபவர்களோடு தான் கூட்டணி அமைப்பேன் என சொல்லிக் கொண்டிருந்தால் வேலைக்கு ஆகாது. கட்சி அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டுமென்றால் குறைந்தது ஒரு எம்எல்ஏ பதவியாவதுவேண்டுமென யோசித்து வருகிறார்.

நம் கொள்கைளைச் சார்ந்த கட்சியுடன் கூட்டணியும் வைக்க வேண்டும். அதே சமயம் இதற்கு முன்னால் நாம் திமுக, அதிமுக, பாஜக என எல்லா கட்சிகள் இடையேயும் பகையை வளர்த்து விட்டோம். இனிமேல் அவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது. அதற்கு தம்பி விஜயின் தமுக கட்சிதான் சரியாக இருக்கும் என உள்ளுக்குள் ஒரு ராஜதந்திரம் செய்கிறார்.

தளபதிக்கு பின்னால் அண்ணன் தோண்டும் குழி

கூட்டணியும் வைக்க வேண்டும், அதே சமயம் கொள்கைகளை முற்றிலும் விலக்கிவிட்டு கூட்டணி வைக்க முடியாது. விஜய் அமைக்கும் கட்சி புது கட்சி. அதனால் அதனுடன் எளிதாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் கூட்டணி வைக்க முடியும். இதனால் என் தம்பி விஜய் கட்சி நம் கொள்கைகளை அப்படியே பின்பற்றுகிறார்கள் என்று கூறி வருகிறார்.

இதே சீமான் தான், ரஜினி ஒரு நடிகர். அரசியலுக்கு வருவதற்கு இந்த தகுதி போதாது, வந்தால் அவருக்கு மக்கள் கொடுக்கிற அடியினால் இனி எந்த ஒரு நடிகரும் அரசியலுக்கு வரக்கூடாது என மேடைக்கு மேடை பேசுவார். ஆனால் இப்பொழுது விஜய்யும் ஒரு நடிகர் தான். இவரை மட்டும் ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை.

அரசியல் ரீதியாக நாம் தமிழர் சீமானை அனைவருக்கும் பிடிக்கும் ஆனால் ரசிகர்கள் என்று வரும்போது விஜய் தான் முதலிடத்தில் இருக்கிறார். இப்பொழுது விஜய் அரசியலுக்கு வந்தால் சீமானுக்கு விழும் ஓட்டு எல்லாம் நிச்சயமாக விஜய் கட்சிக்கு சென்று விடும். இதனையும் யோசித்து தான் சீமான் தம்பி விஜய்யுடன் கூட்டணிக்கு தயார் என்று தூது விடுகிறார்.

சமீபத்தில் விஜய்யை சுத்தலில் விட்ட சில சம்பவங்கள்

Trending News