சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

மீண்டும் முருங்க மரம் ஏறும் எதிர்நீச்சல் வேதாளங்கள்.. குணசேகரனை பெண் சிங்கமாக வேட்டையாடிய ஜனனி

Ethirneechal: குணசேகரனுக்கு எதிராக அப்பத்தாவை கொன்ற வழக்கு சரியான ஆதாரங்களுடன் வலிமையாக இருக்கிறது. எப்படியும் அவருக்கு தண்டனை உறுதி. இதனிடையே தர்ஷினியை கடத்திய வழக்கு இன்னும் அவர் மீது உறுதி செய்யவில்லை. குணசேகரனின் அடியாட்கள் மாட்டியுள்ளனர், அவர்களிடம் போலீஸ் கிடுக்கு பிடி விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே தான் “ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்பது போல் கதிர் மற்றும் ஞானம் இருவரும் அண்ணனை கைது செய்யும் பொழுது துடித்து விடுகின்றனர். இருவரும் போலீஸ் ஸ்டேஷனில் அண்ணனுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். அங்கே இரண்டு கோவக்கார முட்டாபீஸ்களும் போலீசிடம் ஏட்டிக்கு போட்டி பேசுகிறது.

ஞானம் ஒரு பக்கம் அமைதியாக இருந்தாலும், கதிர் மிகவும் துள்ளுகிறார். அண்ணன் குணசேகரன் மாட்டி விட்டால், நாமும் இதில் மாட்டி விடுவோம் என்று கதிருக்கு, உள்ளுக்குள் பொறி தட்டுகிறது. ஜீவானந்தம் மனைவி கொலை வழக்கு வெளியே வந்தால் கதிர் நிச்சயமாக மாட்டிக் கொள்வார்.

குணசேகரனை பெண் சிங்கமாக வேட்டையாடிய ஜனனி

அப்பத்தா வழக்கில் குணசேகரன் யாரையும் நம்பாமல் தனியாக செயல்பட்டார். அதனால் அதில் கதிருக்கு பங்கு இல்லை. ஜீவானந்தம் மனைவி கொலையில் மட்டும் தான் கதிருக்கு பங்கு இருக்கிறது. குணசேகரனின் நண்பர் கிள்ளிவளவன் வாய் திறந்தால் மொத்த கூட்டும் வெளிப்பட்டு விடம். அண்ணனுடன் தம்பி கதிரும் நிச்சயமாக சிறை செல்வார்.

இதனுடைய ஜனனி சிங்க பெண்ணாக குணசேகரனை, அப்பத்தா கொலை வழக்கில் ஜெயிலுக்கு அனுப்பி ஜெய்த்துள்ளார். குடும்பப் பெண்கள் அனைவரும் எந்த ஒரு நெருடலும் இல்லாமல் அவர்கள் பாதையை நோக்கி வெற்றி படிக்கட்டுகளை எடுத்து வைக்கின்றனர். கதிர் மற்றும் ஞானம் இருவரும் அண்ணன் பாசத்தால் பழையபடி வேதாளம் போல் முருங்கை மரம் ஏறி உள்ளனர்

- Advertisement -spot_img

Trending News