திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

பாண்டியனின் கொட்டத்தை அடக்க போகும் மகன்.. ராஜியுடன் இல்லற வாழ்க்கையில் சேர தயாராகிய கதிர்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனுக்கு நாம் பார்த்து கூட்டிட்டு வந்து முறைப்படி கல்யாணம் நடத்திய தங்கமயில் தான் சூப்பர் என்று பெருமையுடன் பீத்துக்கொள்கிறார். ஆனால் தங்கமயிலின் உண்மையான சாயம் வெளுக்கும் பொழுது தான் மீனா மற்றும் ராஜியின் அருமை அவருக்கு புரிய வரும்.

ஆனால் அதற்குள் தங்கமயில் மற்றும் அவருடைய அம்மா பாக்கியம் இருவரும் சேர்ந்து பாண்டியனின் குடும்பத்தை வேரோடு சாய்த்து விடுவார். இதற்கு உதாரணமாக தான் இப்பொழுது பாண்டியன் மற்ற மருமகளை ஒப்பிட்டு தங்கமயிலை தலையில் தூக்கி வைத்து ஓவராக ஆட்டம் ஆடுகிறார். போதாததற்கு செந்தில் மற்றும் மீனா இருவரும் சேர்ந்து வெளியில் நேரத்தை செலவழித்ததை தெரிந்துகொண்ட பாண்டியன் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார்.

ராஜியை சந்தோஷப்படுத்திய கதிர்

இதுல வேற மீனா கொஞ்சம் தனியாக இரண்டு நாள் வெளியே போயிட்டு வரலாம் என்று பிளான் போட்டு வைத்திருக்கிறார். இதை எப்படி செந்தில் அப்பாவிடம் சொல்லி மீனாவின் ஆசையே நிறைவேற்றப் போகிறார் என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து தங்கமயில் படிக்கவில்லை என்றாலும் படிச்ச மருமகள் மாதிரி சீன் போட்டு ஒவ்வொருவரையும் கவுக்க முயற்சி பண்ணுகிறார்.

அதற்கு முதல் பலிகாடாக பாண்டியன் சிக்கிக்கொண்டார். அடுத்து புருஷனையும் கைக்குள் போடப் போகிறார். இது தெரியாமல் பாண்டியன் தங்கமயிலுக்கு அதிக சப்போர்ட் கொடுத்து வருகிறார். அதிலும் தான் என்ன பண்ணாலும் சரி என்று அகங்காரத்துடன் பெற்ற மகன்களிடம் நடந்து கொள்கிறார். இதற்கு ஆப்பு வைக்கும் விதமாக கதிர் அப்பாவின் கொட்டத்தை அடக்கப் போகிறார்.

அதாவது ராஜி கல்யாணம் ஆகிட்டு வந்த புதுசுல கல்லூரிக்கு போவதற்கு காசு இல்லாததால் அத்தை கோமதி இடம் கேட்டிருந்தார். அதற்கு கோமதி, பாண்டியனிடம் கேட்ட பொழுது பாண்டியன் கதிரே ஒரு தண்டச்சோறு, இதுல அவன் கூட்டிட்டு வந்த பிள்ளைக்கு வேற காசு கொடுக்கணுமா என்று வாய்க்கு வந்தபடி பேசி ராஜியை அசிங்கப்படுத்தினார்.

இதனால் ராஜியின் தன்மானத்தை காப்பாற்றும் விதமாக கதிர் பகுதி வேலை நேரமாக சாப்பாடு டெலிவரி பண்ணி பணத்தை சம்பாதிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் தற்போது இதற்கான சம்பளம் கிடைத்துடன் அனைவரது முன்னிலையில் வைத்து பாண்டியனிடம் இது எனக்கான சம்பளம் வாங்கி வச்சுக்கோங்க.

இனி என்னை யாரும் தண்டசோறுனு சொல்ல மாட்டாங்க, என்னை நம்பி வந்த பிள்ளையையும் அசிங்கப்படுத்த மாட்டாங்க என்று பாண்டியன் மூஞ்சியில் கரிய பூசும் விதமாக பணத்தை கொடுத்து விட்டார். இதை எதிர்பார்க்காத பாண்டியன் அப்படியே ஆடிப் போய் நின்று விட்டார். இதனை பார்த்த கோமதி கதிரை தனியாக கூப்பிட்டு நீ அப்பாவிடம் பேசினது தவறு.

அவர் ஏதோ கோவத்துல அப்பம் புரியாமல் இரண்டு வார்த்தையே பேசிட்டாரு. அதற்காக நீ இப்படி நடந்து கொள்வாயா என்று கேட்கிறார். உடனே கதிர், என்னுடைய பொண்டாட்டி ராஜ்ஜியின் மானம் எனக்கு ரொம்பவே முக்கியம். அவள் என்னை நம்பி வந்ததால் யாரிடமும் அசிங்கப்படுத்த நான் விடமாட்டேன் என்று சொல்கிறார். இதே வெளியில் இருந்து கேட்ட ராஜி அப்படியே சந்தோஷத்தில் பூரித்துப் போய் நின்று விட்டார்.

பிறகு வெளியே வந்த கதிர் ராஜியை பார்த்து ரொமான்ஸ் பண்ணி உனக்கு இனி படிப்புக்கு தேவையான எல்லா செலவையும் என்னிடம் கேளு நான் பார்த்துக் கொள்கிறேன். நீ நல்லா படித்து அண்ணி மாதிரி வேலைக்கு போக வேண்டும் என்று ஒரு பொறுப்பான கணவராக கதிர், ராஜியிடம் சொல்கிறார். அந்த வகையில் பிடிக்காமல் கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் தற்போது ராஜி மற்றும் கதிர் மனம் ஒத்தும் தம்பதிகளாக இல்லற வாழ்க்கைக்கு தயாராகி விட்டார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News