Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் தான் இல்லை என்றாலும் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் நிம்மதியாக இருக்கக் கூடாது. அவர்களுடைய சந்தோஷத்தை பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தம்பிகளிடம் செண்டிமெண்டாக பேசி அவர்கள் மனதையும் மாற்றி விட்டார்.
அந்த வகையில் கதிர் மற்றும் ஞானம் பொண்டாட்டிகளின் பேச்சைக் கேட்டு நல்லவர்களாக இருந்த நிலைமையில் தற்போது குணசேகரனின் நிலைமையை பார்த்ததும் அப்படியே மாறிவிட்டார்கள். அதிலும் அண்ணி என்று கூட பார்க்காமல் ஈஸ்வரியை தரக்குறைவாக பேசி வார்த்தையாலே நோகடித்து விட்டார் கதிர்.
நாய் வாலை நிமித்த முடியாது என்று சொல்லும் அளவிற்கு பிறவி குணம் மாறாது என்பதற்கு ஏற்ப கதிர் மற்றும் ஞானம் அண்ணனிடம் தஞ்சம் அடைந்து விட்டார்கள்.
மாஸ் எண்டரி கொடுத்த அப்பத்தா
இதனை தொடர்ந்து குணசேகரன் மீது ஏற்பட்ட புகார் என்னவென்றால் ஆதிரைக்கு வலுக்கட்டாயமாக கல்யாணம் நடத்தியது, தர்ஷணியை கடத்திக் கொடுமைப்படுத்தியது, அப்பத்தாவை கொலை முயற்சி செய்தது, ஜீவானந்தம் மனைவி கயல்விழி இறப்பிற்கு காரணமாக இருந்தது போன்ற குற்றத்திற்காக தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது.
இதில் குணசேகரன் மீது தான் தவறு இருக்கிறது என்பதற்கு ஏற்ப எல்லா ஆதாரமும் குணசேகரனுக்கு பாதகமாக அமைந்து விட்டது. அத்துடன் குணசேகரின் சர்வாதிகாரத்தனம் எந்த அளவிற்கு அவர்கள் வீட்டில் இருக்கும் பெண்களை காயப்படுத்தி இருக்கிறது என்று விசாரிக்கும் முறையில் ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி மற்றும் ஜனனி ஒவ்வொரு பேரும் அவர்களுடைய மனக்குறைகளை கொட்டுகிறார்கள்.
அந்த வகையில் ஜனனி அப்பத்தாவின் இறப்பை நினைத்து ரொம்பவே உருக்கமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுது யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென்று அப்பத்தா மாஸ் என்டரி கொடுக்கிறார். அப்பத்தாவை பார்த்து சந்தோசத்தில் அந்த வீட்டில் உள்ள மருமகள் ஒவ்வொருவரும் பூரித்துப் போய் இருக்கிறார்கள். அத்துடன் அப்பத்தா கோர்ட்டுக்கு சாட்சி சொல்ல வந்து விட்டார்.
ஆனால் வந்ததும் அப்பத்தா வழக்கம்போல் அவருடைய புரட்சிகரமான பேச்சை கொடுத்து கடைசியில் குணசேகரன் சர்வாதிகாரத்தின் சாதகமாக சில காரணங்களையும் சொல்லி அவரை மனநல காப்பகத்தில் சேர்க்கும்படி பரிந்துரை செய்ய போகிறார். இதனை தொடர்ந்து கதிர் மற்றும் ஞானம் இனி எங்களுக்கு தேவையே இல்லை என்று நந்தினி, ரேணுகா அவர்களுடைய தாலியை தூக்கி எறிந்து விட்டு வாடி வாசலை தாண்டி ஜெயித்து காட்டப் போகிறார்கள்.
கடைசியில் குணசேகரன் வீட்டுப் பெண்கள் ஆசைப்பட்டபடி சொந்தக்காலில் நின்னு ஒவ்வொருவரும் அவருடைய கனவை நிறைவேற்றி இலட்சியத்தை அடையப் போகிறார்கள். ஆனால் கடைசிவரை இந்த குணசேகரன் கேரக்டர் மட்டும் திருந்தாத அளவிற்கு ஒரு முடிவில்லா கதாபாத்திரத்துடன் நிறைவு பகுதியை எட்டப் போகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் நடந்த சம்பவங்கள்
- Gunasekaran: ரேணுகா மனக்கஷ்டத்தை போக்கிய சர்வாதிகாரி
- கிள்ளிவளவன் காலை வாரிவிட்டும், காப்பாற்றும் எம்டன்
- குணசேகரனின் மறு உருவமாய் மாறிய கதிருக்கு விழுந்த பளார்