திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

காவிரியை பிரியாமல் இருக்க விஜய் எடுக்கப் போகும் முடிவு.. 7 மாத அவகாசத்தில் ராகினிக்கு கொடுக்கும் சவுக்கடி

Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், கங்கா மற்றும் காவிரி இருவரும் ஒன்று சேர்ந்ததிலிருந்து குமரன், விஜய் அனைவரும் ஒற்றுமையாகி விட்டார்கள். அத்துடன் ஒரே குடும்பம் என்ற உணர்வுடன் ஒட்டுமொத்த சந்தோஷத்துடன் ஒவ்வொரு நாளையும் கழித்து வந்தார்கள்.

அதே சந்தோஷத்துடன் அனைவரும் சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது விஜய், காவேரியை முழு மனதுடன் தன்னுடைய மனைவி என்று நினைப்புடன் ஏற்றுக் கொண்டார். அதே மாதிரி காவிரிக்கு அந்த ஒரு நினைப்பு இருந்தாலும் அவ்வப்போது நம் ஒப்பந்தத்தின் படி கல்யாணம் ஆகிட்டு வந்த விஷயத்தை நினைவு கூர்ந்து பார்க்கிறார்.

காவிரியை உருகி உருகி காதலிக்கும் விஜய்

அத்துடன் விஜய் சந்தோஷமாக இருக்கும் பொழுது நாம் இருவரும் இன்னும் பிரிவதற்கு ஏழு மாதங்கள் தான் இருக்கிறது என்று சொல்லி விஜய் மனதை நோகடித்து விட்டார். இதை கேட்டதிலிருந்து விஜய் சந்தோசமாக இருக்க முடியாமல் அப்செட் ஆகிவிட்டார். இதனை பார்த்த கங்கா, என்ன ஆச்சு விஜய் ஏன் அமைதியாக இருக்கிறார் என்று காவேரியிடம் கேட்கிறார்.

அதற்கு காவேரி அவ்வளவு நேரம் வண்டி ஓட்டிட்டு வந்த களைப்பாக இருக்கும், ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று சொல்லி சமாளித்து விடுகிறார். இதனைத் தொடர்ந்து காவிரி மற்றும் கங்கா ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக வருவதை பார்ப்பதற்காக இவர்கள் குடும்பம் ஒட்டுமொத்தமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் காரை விட்டு இவர்கள் இறங்கியதும் கங்கா மற்றும் காவிரியை அனைத்து கொண்டு இவர்களுடைய அம்மா ஆனந்த கண்ணீரை வடித்து விடுகிறார். அப்பொழுது விஜய் நீங்கள் பேசிக் கொண்டிருங்கள் நான் கொஞ்சம் ஓய்வெடுத்து வருகிறேன் என்று வீட்டுக்கு போய் விடுகிறார். பிறகு வீட்டில் இருந்து காவேரி சொன்ன அந்த வார்த்தையை யோசித்துக் கொண்டு ரொம்பவே சோகமாக இருக்கிறார்.

அப்பொழுது கூடிய சீக்கிரத்தில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் காவேரியிடம் நம் மனதில் இருக்கும் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கிறார். அதாவது காவேரியை மனதார விஜய்க்கு பிடித்து விட்டது. காவிரி இல்லாமல் இனி ஒரு நொடி கூட தனியாக இருக்க முடியாது என்று விஜய்க்கு புரிந்து விட்டது. அந்த வகையில் காவிரியிடம் காதலை சொல்லி மனதார கணவன் மனைவியாக வாழலாம் என்று முடிவு எடுத்து விட்டார்.

இதனை கூடிய விரைவில் காவிரியிடம் எப்படியாவது தெரியப்படுத்தி விட வேண்டும் என்று விஜய் நினைக்கிறார். அதே மாதிரி காவிரிக்கும் விஜய் என்றால் ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதை எப்படி சொல்வது என்று தெரியாமல் மனதிற்குள் பூட்டி வைத்து இருக்கிறார். இதனை தொடர்ந்து ராகினிடமிருந்து எந்த பிரச்சினையும் காவிரிக்கு வந்து விடக்கூடாது என்ற விஜய் ஒரு பாதுகாவலனாக இருந்து காவிரியுடன் சேர்ந்து ராகினிக்கு சரியான சவுக்கடி கொடுக்கப் போகிறார்.

சும்மாவே காவேரி மட்டுமே தனியாக இருந்து ராகினியை புரட்டி எடுப்பார். இனி விஜய்யும் கூட இருக்கிறார் என்றால் சொல்லவா செய்யணும், ஒவ்வொரு நாளும் ராகினிக்கு திண்டாட்டம் என்று சொல்ல அளவிற்கு ஒவ்வொரு சிக்கலையும் சந்திக்கப் போகிறார்.

மகாநதி சீரியலில் நடந்த முந்தைய சம்பவங்கள்

Trending News