திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கதிருக்கு எதிராக பாண்டியனிடம் கொளுத்தி போட்ட தங்கமயில்.. கணவனை உருகி உருகி காதலிக்கும் ராஜி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கதிர் ராஜியை விருப்பம் இல்லாமல் கல்யாணம் பண்ணிட்டு வந்தாலும் நம்மளை நம்பி வந்த பெண்ணுக்கு எந்தவித அவமானமும் ஏற்பட்டு விடக்கூடாது என்று ஒரு பொறுப்பான கணவராக கதிர் நடந்து கொள்கிறார்.

அந்த வகையில் கதிரை எப்பொழுது மட்டும் தட்டி பேசி வரும் பாண்டியனுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் எனக்கும் என்னுடைய பொண்டாட்டி ராஜிக்கும் தேவையான செலவுகளை நான் முடிந்த அளவுக்கு சம்பாதித்து வைத்திருக்கிறேன். இதை வாங்கிக் கொள்ளுங்கள் இனி யாரும் என் மனைவியை அவமானப்படுத்தக் கூடாது என்று கதிர் நெத்திலடித்தபடி பாண்டியனிடம் பேசிவிட்டார்.

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய மருமகள்

இதை கேட்ட பாண்டியன் இந்த ரூபாய் உங்க ரெண்டு பேருக்கும் போதுமா என்று கேள்வி கேட்கிறார். அத்துடன் நான் பெற்று வளர்த்த அனைத்திற்கும் கணக்கு போட்டால் உன்னால திருப்பிக் கொடுக்க முடியுமா என்று கேட்கிறார். ஒரு மாதத்திற்கு குறைந்தது உங்க இரண்டு பேருக்கு என்ன செலவாகும் என்று தெரியுமா என சொல்லி கோமதி இடம் கணக்கு கேட்கிறார்.

அந்த நிலையில் கோமதி எதுவும் சொல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது பாண்டியன் தங்க மயிலிடம் இவர்கள் இருவருக்கும் குறைந்தது எவ்வளவாகும் என்று கேட்கிறார். உடனே கொஞ்சம் கூட யோசிக்காமல் தங்கமயில் இருவருக்கும் குறைந்தது பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகும் என்று சொல்கிறார்.

எப்பொழுது தான் இந்த குடும்பத்தில் ஒற்றுமையை கலைக்கலாம் என்று மாமனாருக்கு ஜால்ரா போட்டு வரும் தங்கமயில் இதுதான் சான்ஸ் என்று ஓவராக கொளுத்தி போடுகிறார். இதைக் கேட்ட பாண்டியன் கதிரிடம் நீங்கள் இங்கே சாப்பிட்டு தூங்குவதற்கு பத்தாயிரம் ரூபாய் ஆகும் அதை கொடுக்க முடியுமா என்று கேட்கிறார்.

உடனே கதிர் அடுத்த மாசத்திலிருந்து நீங்கள் கேட்ட பணத்தை நான் கொடுக்கிறேன் என்று ரோஷத்துடன் பேசி கையில் இருக்கும் பணத்தை பாண்டியன் கையில் வைத்து விட்டுப் போய் விடுகிறார். பிறகு கதிரை பார்த்து கோமதி நீ பண்ணியது நியாயமா என்று கேட்கும் நிலையில் கதிர் என் மனைவி யாரிடமும் அசிங்கப்படுத்த நான் விரும்பவில்லை.

இனி யாரும் அவமானப்படுத்தவும் கூடாது என்று ராஜிக்கு சப்போர்ட்டாக பேசி விட்டார். இதை கேட்ட ராஜி அப்படியே சந்தோஷத்தில் பூத்து போய் கதிரை முழு மனதுடன் காதலிக்க ஆரம்பித்து விட்டார். மேலும் இந்த பிரச்சனையை நினைத்து கோமதி தனியாக சோகத்தில் இருக்கும் பொழுது மீனா அவருக்கு ஆறுதல் கூறி கதிர் மற்றும் ராஜி தற்போது மனம் ஒத்தும் தம்பதிகளாக வாழ்ந்து வருகிறார்கள் அதை பாருங்கள் என்று சமாதானப்படுத்துகிறார்.

உடனே கோமதி ஆமாம், நான் கூட பிடிக்காமல் கல்யாணம் பண்ணி வைக்கிறோமோ இவர்கள் இருவரும் எப்படி இருப்பார்கள் என்று பயத்திலேயே இருந்தேன். தற்போது அந்த பயம் எனக்கு இல்லை என்று சொல்லிய நிலையில் ராஜி கதிரை நினைத்துக் கொண்டு சந்தோஷத்தில் வருகிறார். இந்த சமயத்தில் தங்கமயில் நுழைந்து கதிர் பேசியது தவறுதான் இப்படி பெரியவர்களிடம் வேண்டா வெறுப்பாக பேசுவது நியாயமே இல்லை என்று போட்டுக் கொடுக்கிறார்.

உடனே கோமதி கதிரை விட்டுக் கொடுக்காமல், அவன் பேசியது தவறை இல்லை கண்டிப்பாக அவருடைய அப்பா இதை புரிந்து கொண்டு நல்ல விதமாக எடுத்துக் கொள்வார் என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். இதே மாதிரி ஒவ்வொரு பிரச்சனையிலும் அதை பெருசாக்கி குளிர் காய நினைக்கிறார் தங்கமயில். அந்த வகையில் இந்த குடும்பம் சிக்கிடாமல் ஒற்றுமையாக இருந்தால் பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சுவாரசியமான சம்பவம்

Trending News