ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 24, 2024

16 வருடங்களுக்குப் பின் அதிரடி காட்டும் மோகனின் ஹரா.. அப்பா பொண்ணு பாசம் ஜெயிக்குமா? விமர்சனம்

Mohan Haraa Movie review: 80களில் வெள்ளி விழா நாயகனாக அனைத்து ஹீரோக்களையும் ஆட்டி படைத்த ஒரே நடிகர் மைக் மோகன் தான். இவருடைய படங்களை பார்க்கும் பொழுது மோகன் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி வாழ்ந்திருக்கிறார் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். அந்த அளவிற்கு எதார்த்தமான நடிப்புடன் நடித்து மக்கள் மனதை வென்றிருக்கிறார்.

16 ஆண்டுகளுக்குப் பின் ஹீரோயிசம் காட்டும் மோகன்

அதனால் இவருடைய முக்கால்வாசி படங்கள் 100 நாட்களையும் தாண்டி வெள்ளி விழா பெற்று மற்ற நடிகர்களை பின்னே தள்ளி இருக்கிறது. அப்படிப்பட்ட ஹீரோ கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பின் மறுபடியும் சினிமாவிற்குள் நுழைந்திருக்கிறார். நுழைந்தப்படத்திலேயே அதிரடி காட்டும் விதமாக ஹரா என்ற படத்தில் திரில்லர் கதையை கையில் எடுத்திருக்கிறார்.

இப்படத்தை புது இயக்குனராக சினிமாவிற்குள் நுழைந்திருக்கும் விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். இதில் அனுமோல், யோகி பாபு, சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ரஷாந்த் அரவிந்த் இசையமைத்திருக்கிறார்.

அந்த வகையில் இப்படத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை கண்டறியும் விதமாக சஸ்பென்ஸ் ஆக கதை நகர்கிறது. வழக்கம் போல் அநியாயங்களை தட்டிக் கேட்கும் விதமாக ஹீரோ மோகன் பல கெட்டப்புகளை போட்டு ஒவ்வொருவரையும் தாக்குகிறார்.

இன்னொரு பக்கம் அப்பா பாசத்துக்கு நடுவில் யாராலயும் மிஞ்ச முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப செண்டிமெண்டாக கதை நகர்கிறது. அதற்கு ஏற்ற மாதிரி ஒரு உருக்கமான பாடலையும் வைத்து கலங்கடிக்க வைத்துவிடுகிறது. மேலும் இதில் மகளுக்கு ஏற்பட்ட கொடுமைகளை தட்டிக் கேட்கும் விதமாக மோகன் போராட்டங்களை சந்தித்து வருவதாக கதை நகர்கிறது.

அத்துடன் இதுவரை நம் பார்த்த மோகன் படங்களில் சோகமான முகத்தை தான் பார்த்திருப்போம். ஆனால் முதல் முறையாக அப்பா மகள் பாசத்தை காட்டி ஆக்ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி இருப்பது பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நுழைந்திருக்கும் 80ஸ் ஹீரோ மோகனுக்கு இப்படம் நிச்சயமாக கைகொடுக்கும்.

தற்போது இது ஒரு ட்ரெண்டிங்காகவே வருகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் மோகனுக்கு ஹரா, ராமராஜனுக்கு சாமானியன், கவுண்டமணிக்கு ஒத்த ஓட்டு முத்தையா மற்றும் பிரசாந்துக்கு ஒரு திருப்புமுனையாக கோட் படத்திலும் நடித்திருப்பது நிச்சயமாக இவர்களுக்கு ஒரு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -spot_img

Trending News