Vijay sethupathi in 50th Movie: விஜய் சேதுபதி கிட்டத்தட்ட சினிமாவிற்குள் நுழைந்து 20 வருடங்கள் ஆகியிருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்தது தான் அதிகமாக இருந்தது. ஆனாலும் கிடைக்கும் வாய்ப்பை விட்டுவிடக்கூடாது என்று அதை சரிவர நடித்து அனைவரிடமும் கைதட்டலை வாங்கினார். அதனால் தான் என்னமோ இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் எக்கச்சக்கமாக அமைந்துவிட்டது.
அத்துடன் ஹீரோவாக ஜொலித்து பல படங்களில் வெற்றிவாகை சூடிய இவர் நடிப்புதான் எனக்கு பெயரும் புகழையும் வாங்கி கொடுத்தது. அதனால் நான் நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று சொல்ல மாட்டேன் என நெகட்டிவ் ஆகவும் வில்லனாகவும் ஒரு கை பார்த்து வந்தார். அதிலும் இவர் பெயர் சொல்லும் அளவிற்கு ஜொலித்து விட்டார் என்றே சொல்லலாம்.
புர்ஜ் கலிஃபாவில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி
ஆனால் தொடர்ச்சியாக வில்லனாக நடித்து வந்ததால் ஹீரோவுடைய இமேஜ் உடைந்து விட்டது என்று அவருக்கு தோன்றியதால் இனி ஹீரோவாக மட்டும் தான் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறார். அந்த வகையில் தற்போது குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நித்திலன் இயக்கத்தில் மகாராஜா படத்தில் நடித்துள்ளார். இப்படம் விஜய் சேதுபதியின் 50வது படம்.
இப்படத்தில் இவருடன் மம்தா மோகன் தாஸ், அனுராக் கஷ்யப், அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வருகிற ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது. அதனால் இப்படத்தின் பிரமோஷனை முன்னிட்டு படக் குழுவினர் அனைவரும் துபாய்க்கு சென்று இருக்கிறார்கள்.
அங்கே மிக உயரமான கட்டிடமாக இருக்கும் புர்ஜ் கலிஃபாவில் இப்படத்தின் காட்சிகளை ஒளிபரப்பு செய்து மிகப்பிரமாண்டமாக பிரமோஷன் செய்திருக்கிறார்கள். அத்துடன் அதில் பக்கத்தில் இருந்து விஜய் சேதுபதி எடுத்த புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதே நேரத்தில் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன் குடும்ப சூழ்நிலை காரணமாக பஞ்சம் பொழைக்க துபாயில் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்து வந்தார்.
அப்படிப்பட்ட இவருடைய கடினமான உழைப்பும் வளர்ச்சியும் அதிக அளவில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது. இதை சுட்டிக்காட்டும் விதமாக அப்பொழுது நண்பர்களுடன் துபாயில் எடுத்த புகைப்படமும் இப்பொழுது மகாராஜா படத்தின் ப்ரோமோஷனில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி போட்டோவையும் இணைத்து இதுதாண்டா வளர்ச்சி என்று காலரை தூக்கிவிடும் அளவிற்கு விஜய் சேதுபதி அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறார்.